Monday, May 24, 2010

பெண்கள் காதல்... ஆண்கள் சாதல்....




















உலகபந்தில் துளைகள் இட்டு பார்ப்பது
சுலபம் இல்லை...

தவணை முறையில் இதயத்தை துளையிடும்
பெண்ணின் பார்வைக்கு இணை இல்லை.....

வாழ்கையில் லட்சியம் கொண்டவன், பெண்ணின்
கருவிழி பார்வையால் கருகி போகிறான்...

இவள் துணையென நினைக்கின்ற பொழுதே மரண
வாயிலை தொட்டு பார்க்கிறான்...

பெண்ணே எத்தனை காலம் ஆண்களின் மேல்
உந்தன் சாபம் குறையும்...

பெண்ணின் நினைவால் ஆண்கள் நெஞ்சில் கல்லறையில்
கூட காதல் உறையும்....

Friday, May 21, 2010

எனது ரயில் பயணத்தின் அனுபவம்...




















எனது தனியான முதல் பஸ் பயணம் எனது 10 அவது வயதில் தான் ஆரம்பித்தது அன்னிக்குதான் என்னோட சொந்த ஊருக்கு தனியா போனேன்.அதுவரை என்னுடைய அப்பா அல்லது அம்மா கூடதான் எங்க போனாலும் போவேன்.நான் முதல் முதல்ல தனியா பஸ்ல போறாப்போ ரொம்ப பயமா இருந்துச்சு ஆனாலும் தனிய போறோம் நாம பெரிய ஆளாயிட்டோம்னு ஒரு சந்தோசமும், பெருமையுமாய் இருந்துச்சு.ஏன்னா அந்த வயசுல பஸ்ல தனியாய் போறதே எனக்கு பெரிய விஷயமா தோனுச்சு.பஸ்சுகே இப்படினா ரயில் பத்தி சொல்லவே வேண்டாம் படத்துல பார்த்ததோட சரி.அதுவும் 'ஷோலே','கேப்டன் பிரபாகரன்' படத்துல தான் அதிகமா பார்த்திருக்கேன் நேர்ல பார்க்குறதுக்கான சந்தர்ப்பம் அப்போதைக்கு அமையல.

நானும் என் தம்பியும் சின்ன வயசுல லாரி, பஸ் எல்லாம் அதிகமா பார்த்திருந்ததனலேயோ என்னவோ தீபெட்டிய வெச்சு லாரி, பஸ் எல்லாம் செஞ்சு விளையாடுவோம் ஆனால் ரயில் மட்டும் செய்ய தெரியாது.இப்படியே எனது வாழ்க்கை +2 முடிக்கும் வரைக்கும் ரயில் பத்தின பிம்பத்தை மட்டும் சுமந்து கொண்டு போச்சு. எனது முதல் ரயில் பயணம் இன்ஜினியரிங் கவுன்செல்லிங்காக சென்னை வரை சென்றதுதான்.அதுவும் ஓசிப்பயணம் எனது நண்பனின் தாத்தா ரயில்வேல டிடிஆர் அதனால் தான் அந்த ஓசிப்பயணம், ஒசின்றதுனலையோ என்னவோ எங்க அப்பா ரயில்ல கூட்டிட்டு போனாரு.இல்லைனா அன்னிக்கு ரயில்ல போயிருக்கிறது சந்தேகம் தான்.

ரயில்ல ஏறி டிடிஆர்கான ச்லீபேர் பெர்த் மாதிரி இருந்த ஒண்ணுல நானும் என் அப்பாவும் உக்கார்ந்துகிட்டோம். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அந்த டிடிஆர் என் அப்பா ரெண்டு பேறும் எங்கயோ போய்ட்டாங்க.நான் அப்படியே சன்னல் ஓரமா உக்கார்ந்துகிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு வந்தேன்.ராஜா குதிரையில் ஊர்வலம் போறதை போல என் மனசுக்குள்ள ஒரு இருமாப்பு.ரயிலை விட ரெண்டு பக்கத்துல இருக்கிற மரங்களும், அப்பபோ வந்து போகும் மலை என்னை பார்த்து தலைவணங்கி பயந்து எதிர்புறமா வேகமா ஓடுதொனுகூட தோனுச்சு.பயணம் முழுவதும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாம திருவிழவ வேடிக்கை பார்க்கிற குழந்தை மாதிரி வேடிக்கை பார்த்துகிட்டே வந்தேன்.ஒரு சில நேரம் மட்டும் எதிர்ல ஒரு பொண்ணு இருந்தா எப்படி இருக்கும்னு கூட ஒரு எண்ணம் தோணினாலும் (இணைந்த கைகள் படத்துல கதாநாயகி கூட இருப்பாங்க இல்ல அது மாதிரி) ரயில் பயணத்தின் உற்சாகமே என்னை அதிகம் ஆக்கிரமிசுக்கிச்சு.அந்த பயணத்தின் பொது கழிப்பறைக்கு கூட போகலேன்னா பாருங்க.இப்படியாக எனது பயணம் அன்னிக்கு ராத்திரி 10 மணிக்கு முடிஞ்சு, டிடிஆர்கான அறையில் தங்கினோம். டிடிஆர்ம் எனது அப்பாவும் சரக்கு அடிக்க போயிட்டு எனக்கு ஒரு சில்லி வாங்கீட்டு வந்தாங்க அட பாவிங்கள! எனக்கு ஒரு பீர் வாங்கிட்டு வந்திருக்கலாமில்லன்னு கேட்கிறதுக்கு அவங்க என்ன என்னோட நண்பர்களா? அடுத்த நாள் கவுன்செல்லிங் நல்ல படியா முடிஞ்சு வீடு திரும்பினோம்.


அதற்கப்புறம் எனக்கு ரயிலுக்குமான சிநேகிதம் 5 வருஷம் விட்டு போச்சு.எப்போ சென்னைல நான் வேலைக்கு சேர்ந்தேனோ அப்போ இருந்து என்னோட ரயில் சிநேகம் நீடிக்க ஆரம்பிச்சுது. எனக்கு தெரிந்து எனக்கு திருமணம் ஆகும் வரை முன்பதிவு செய்து பயணித்ததே கிடையாது ஏனா என்னோட கம்பெனி அப்படி என்னோட நண்பர்களுக்கெல்லாம் பண்டிகைக்கான விடுமுறை எப்போது என்று முன்னமே தெரிச்சிருக்கும்.ஆனா எனக்கு அப்படி இல்ல என்னோட விடுமுறை ஒரு நாளைக்கு முன்னாடி தான் எனக்கே தெரிய வரும் அப்படி இருக்கிறப்போ எங்க முன்பதிவு செய்யறது.பொங்கல்னாலும் சரி தீபவளினாலும் சரி எப்பயுமே பதிவு செய்யப்படாத பெட்டிகளில் போறது தான் வழக்கம் ஆகிப்போனது. பண்டிகை சமயங்களில் பயணிப்பது என்பது கடலில் பெருங்காயத்தை போட்டு தேடுற மாதிரி. கடுகு மேல இருந்து கீழ விழுந்தாலும் அது ரயில் பெட்டியோட தரையை தொட 5 மணிநேரம் ஆகும் அவ்ளோ கூட்ட நெரிசல் இருக்கும்.அந்த நெரிசல்ல ஆயிரம் சண்டைகள் நடந்துகிட்டு இருக்கும்.

அந்த கூட்ட நெரிசலில் பயணிப்பது எனக்கு ஒரு வகையான சுகமான அனுபவத்தை கொடுக்க தான் செஞ்சுச்சு.அது எப்படி அவனவன் நிக்க கூட இடமில்ல உனக்கெப்படி ஒரு சுகமான அனுபவம்னு நீங்க கேட்கிறது எனக்கு புரிது.சீட்ல நாலு பேர் தாராளமா உட்காரலாம் பக்கத்துக்கு காபின்ல அஞ்சு பேர் உட்கார்ந்திருபாங்க அதை பார்த்து சீட் பக்கதுல நினிட்டு இருக்கும் ஒரு ஆள் "ஏங்க கொஞ்சம் தள்ளி உட்காருங்க பக்கதுல சீட்ல அஞ்சு பேர் உட்கார்ந்திகாங்க" நு சொல்வார்.அதுக்கு சீட்ல உட்கார்ந்திருப்பவர் "ஏங்க இதுல நாலு பேர் தான் உட்கார முடியும்ங்க பாருங்க மேல நம்பர் போட்ருக்காங்க" என்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும்.நின்னிட்டு இருக்கிற ஆளுக்கு பக்கதுல நிக்கிற ரெண்டு பேர் சாதகமா பேசுவாங்க.உட்கார்ந்திருபவருக்கு அவர் பக்கத்தில் உட்கர்ந்திருபவங்க சாதகமா பேசுவாங்க

இது ஒரு பக்கம் இருக்க ரயில்ல ஏறி உள்ள வந்தவுடனே டக்குனு கீழ தரையில பேப்பரைவிரிச்சோ இல்ல சும்மாவோ உட்கார்ந்துக்குவாங்க அதில் சில பேர் படுத்துக்குவாங்க. இதுக்கும் ஒரு சண்டை நடக்கும் பாருங்க அது அதுக்குமேல இருக்கும்.அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏறவங்களுக்கு படியில தொங்குரதுக்குகூட இடம் இருக்காது.நடைமேடையில் நின்னுகிட்டு கத்துவாங்க "எம்மா எப்ப எந்திரிங்க எல்லாம் படில தொங்கிட்டு வராங்க நீங்க சொகமா படுத்துக்கிட்டும்,உக்கந்துகிட்டும் வரீங்க" என்று ஒரே கூச்சலும் சண்டையும இருக்கும்.இது ஒரு பக்கம் இருக்க காலை மிதிச்சுட்டான் கையை மிதிச்சுட்டான்னு ஒரு சண்டை வேற.ஒரு வழிய கொஞ்ச தூரம் போனவுடன் ஐந்தாமவருக்கு சீட்ல புண்ணியவான் எடம் கொடுத்திடுவாங்க அப்புறம் சண்டை போட்ட ரெண்டு பேரும் நண்பர்களாகி பல விசயங்களை பேசிகிட்டு வருவாங்க.

இதுல மேல ஏறி உட்கருரதுக்கு ஒரு சண்டை "என்ன 3 பேர் தான் உட்கர்ந்திருகீங்க நாலு பேர் உட்காரலமேன்னு" ஒருத்தர் சொல்ல மேல உட்கர்ந்திருகிறவர் "என்னங்க பேசுறீங்க மேல எப்படி நாலு பேர் உட்காரமுடியும்" என்று அது ஒரு தனி வாக்குவாதம் ஓடிக்கொண்டிருக்கும்.லகஜு வெக்கிற எடத்துல ரெண்டு மூணு பேர் படுத்திட்டு இருப்பாங்க அது பொறுக்காதா அதை பார்த்து ஒன்னு ரெண்டு பேர் "ஏங்க அது லகஜு வெக்கிற அதுல படுத்துகிட்டு வந்த நாங்க எங்க கொண்டு போய் வெயகிறது" சொல்லிக்கிட்டு வருவாங்க.

இதுக்கு இடையில எவனாவது ஒருத்தன் கைபேசில FM அல்லது பதிவு செஞ்சு வெச்சிருக்கிற பாட்டை போட்டு விட்டுருவானுங்க.சிலர் கடுப்பாகி "அவனவன் நிக்க முடியாம வரான் ஏன்பா பாட்டை போட்டு உயிரை வாங்குரீங்கனு" சத்தமாகவும் ஒரு சிலர் முனகுவதும் நமக்கு கேட்கத்தான் செய்யும்.பிடிக்கிறதோ பிடிகலையோ வேற வழியில்ல அந்த பாட்டை கேட்டுட்டு தான் வரணும்.இதுல கொஞ்ச பேர் மட்டும் தான் தண்ணீர் வெச்சிருப்பாங்க.தண்ணி வேச்சிருகிரவன் கூட தண்ணிய குடிக்காம வெச்சுகிட்டு வருவான்.பக்கதுல இருக்கிற ஒரு ஆள் "சார் கொஞ்சம் தண்ணி கெடைக்குமா" நு கேட்பார்.இந்தங்கனு கடுப்போட தான் தண்ணிய குடுப்பாங்க. பதிவு செய்திட்டு போற பெட்டிகளில் இதுபோன்ற விசயங்களை பார்க்க முடியாது.எத்தனை வகையான மனிதர்கள் எத்தனை எதிர்பார்ப்புகள்,எத்தனை சண்டைகள் இந்த அனுபவமும் புதுசா இருந்ததுனலையோ என்னவோ எனக்கு அந்த பயணம் புடிச்சிருந்துச்சு..

கல்யாணமாகி எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் எனது ரயில் பயணம் வாரம் இருமுறை என வாடிக்கையாகிப்போனது.வெள்ளிகிழமை சேலம் விரைவு ரயில் எக்மோர்இல் இருந்து சேலம் வரை ராத்திரி 11:00 மணிக்கு புறப்படும் ஆனால் 9:00 மணிக்கெல்லாம் நடைமேடை வந்துவிடும்.அதனால் 9:00 மணிக்கு அங்கு இருந்தால் படுக்க இடம்பிடிச்சிரலாம் நு எல்லா வெள்ளிகிலமைகளிலும் அவசர அவசரமாக போய் படுக்க இடம்பிடிச்சுகுவோம். படுக்கிறதுக்கு இடம் கிடச்சிட அவ்வளவு சந்தோசம் 86 ரூபாய்க்கு ஜாலியா படுத்திட்டு போரேமேன்னு தான் அதுவும் முன்பதிவு இல்லாத பெட்டியில்.அந்த ரயில்ல மேல உட்கார்ந்த தலை இடிக்கும் உட்கார முடியாது அதனால மேல ஏறி படுத்துகிட்டா யாரும் தொந்தரவு பண்ணமாட்டாங்க.அதுவுமில்லாமா இப்படி ஒரு ரயில் இருக்கிறது நெறைய பேருக்கு தெரியாம இருந்துச்சு.அதனலயே எங்களுக்கு வார வாரம் இடம் கிடச்சுகிட்டு இருந்துச்சு.இப்படி ஒரு ரயில் ஒன்னு சேலத்துக்கு இருக்குதுன்னு மக்களுக்கு அதிகமா தெரியாத வரைக்கும் எங்களோட பயணம் முன்பதிவில்லாமலே சுகமானதா தான் இருந்துச்சு.


வெள்ளிகிழமைகளில் சென்ட்ரல்ல இருந்து இப்படி ப்ரீயா போற ரயில் எதையும் நீங்க பார்க்க முடியாது.சேலம் எக்ஸ்பிரஸ் பத்தி அதிகமா தெரிய ஆரம்பிச்சவுடனே மக்கள் அதிகமா அதில் வர ஆரம்பிச்சுடாங்க 8 மணிக்கெல்லாம் 7 அவது நடைமேடைல வந்து உக்காந்துக்க ஆரம்பிச்சுட்டாங்க.எங்க பாடு திண்டாட்டமா போச்சு.இப்படியாக எங்களோட சென்னை - ஈரோடு பயணம் போயிகிட்டு இருந்துச்சு.


ஞாயிற்று கிழமையில் எங்களின் ஈரோடு - சென்னை பயணம் இன்னும் சுவாரசியமானது.நான் தனியாக வரும் போகும் பொழுது கோவை எக்ஸ்ப்ரஸில் தான் சென்னை வருவது வழக்கம் அதுவும் முன்பதிவு செய்யப்படாததே வழக்கம் போல்.நான் நடைமேடைல போய் நிக்கிற எடத்துல சரியாய் ஊனமுற்றோர்கான பெட்டிக்கு அடுத்த சின்ன பெட்டி வந்து நிற்கும் அதுக்கு பின்னாடி ஆயிரம் பெட்டி இருந்தாலும் அதுல தான் ஏறுவேன்.நான் தான் வழபழ சோம்பேறின இருகிறவன் அத்தனை பெரும் என்னை மாதிரியே இருப்பாங்க எல்லாரும் அதே பெட்டில தான் ஏறுவாங்க.அதிலேயும் ஆயிரம் சண்டை சச்சரவு.

அதுக்கப்புறம் இப்பேல்லாம் அல்லேபே - தன்பாத் விரைவு ரயில்ல தான் வர்றது மதியம் 2:00 ஈரோடுக்கு வந்து சேரும் 15 நிமிஷம் சுத்தம் செய்வாங்க 2:15 க்கு புறப்படும்.இது கேரளால இருந்து வடமாநிலம் வரை போறதுனால நெறைய வகை மக்களை பார்க்க முடியும்.கட்டிட வேலை செய்யும் பாக்கு போட்ட வாயுடைய அம்பாளை,பொம்பளை, பசங்க பொண்ணுங்க.கேரளத்து பைங்கிளிகள், சேட்டன், சேட்டதிகள், நம்ம ஊர்ல இருந்து ஒரிசா வரை வெளிக்கு போகும் ஆம்பளைங்க, முஸ்லீம் பொம்பளைங்க, அவங்க குழந்தைங்கநு நெறைய பேர் பார்க்க முடியும்.நான் அதுல முன் பதிவு பண்ணி வந்தாலும் படுத்து தூங்க மாட்டேன்.

பக்கதுல இருக்கிற யாராவது ஒருத்தரோட பேசிகிட்டு இருப்பேன்.அதுமட்டும் இல்லாம குழந்தைகள் பக்கதுல இருந்த அதுங்க கூட விளையாடுறதும் அதுங்களை கொஞ்சிகிட்டும் இருப்பேன்.அதனாலையோ எனவோ குழந்தைங்க என்கிட்ட நல்ல ஒட்டிகுங்க இல்ல என்னை காமெடி பீஸ்நு கண்டுபிடிசிருங்களோ என்னவோ அதுங்களை கேட்டாத்தான் தெரியும்.

எனக்கு ரயில் மூலமா கிடச்ச நண்பர்கள் நிறைய அவங்களோட அப்பபோ இன்னமும் பேசிக்கிட்டு தான் இருக்கேன் பேச முடியாட்டி SMS அவது அனுப்புவேன்.பக்கதுல இருக்கிறவங்க கூட பேசறப்போ அவங்களை பத்தின பல விஷயங்கள் நம்மக்கு தெரிய வரும்.எங்க போறாங்க என்ன பண்றாங்க அப்படி எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவேன்.அதுல நமக்கு எத்தனையோ அனுபவங்கள் கிடய்க்குது.எனக்கு தெரிஞ்சு ரயில்ல எதை கொண்டு வந்தாலும் அதை வாங்கி முதல்ல சாப்டறது வடமாநிலத்து கட்டிட வேலைசெய்யும் பசங்க அமபளைங்கதான் சுண்டல், சப்போட்ட,கொய்யாப்பழம், சமோசா, மசால் பொறி இப்படி எதையும் விட்டு வைக்கிறது இல்ல இது தவிர பிரியாணி. "என்னடா இது இப்படி சாபிடராங்களே அனா ஆள் ஒள்ளிய இருக்காங்க, இவங்க இதை எல்லாம் பார்த்தது கூட இல்லியா"ன்னு கூட தோணும். ஆனா அவங்களை ஒரு விசயத்துல பாராட்டியே ஆகணும் எனத்தான் அழுக்கு படிஞ்ச தலையும், அழுக்கு ஜீன்சும், பாக்கு போட்ட வாயுமாய் இருந்தாலும் கூட பிச்சைகாரர்களுக்கும், வேறயாரு காசுனு கேட்டாலும் கொடுத்திடுவாங்க.

ஆனா அப்படி பட்டவங்களுக்கு திருநங்கைகள் படுதிற கொடுமை இருக்கே ஒரு சில நேரம் காமெடியா தெரிஞ்சாலும் கூட ஒரு சில நேரம் கஷ்டமா இருக்கும். தமிழ் ஆட்களை விட்டுடுவாங்க வடமாநில ஆட்களை சட்டையை பிடிச்சு காசு கேட்பாங்க இலின செருப்பை எடுத்து காமிப்பாங்க பாவமாய் இருக்கும்.இது போல தான் ஒரு முறை, ஆனால் அது காமெடியா முடிஞ்சிருச்சு. ஒரு திருநங்கை வடமாநில ஆள் ஒருத்தரோட சட்டையை பிடிச்சு "தே ரே தே பைசா நிக்கால் நு" கேட்டு இருந்துச்சு அந்த ஆள் கொடுக்கிற மாதிர சட்டை பையில் கையை விட்டு எடுக்க அதுல இருந்து ஒரு பாயர் அண்ட் லவ்லி வந்துச்சு அதை பார்த்த அந்த திருநங்கை "நீ கெட்ட கேடுக்கு பியர் அண்ட் லவ்லி" யானு கேட்டு ஜன்னல் வழிய தூக்கி எறிஞ்சிட்டு போட்டுச்சு அது பார்த்து எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுடாங்க அந்த வடமாநில ஆள் உட்பட.

இந்த ரயிலிலே ஒரு வசதி உண்டு அது தான் கிரேன்ட் ரிசர்வசன் ஈரோடு சேலம் ல ஏறுரவங்களுக்கு மட்டும் இந்த வசதி உண்டு எக்ஸ்ட்ரா கோச் இருக்கும் அதுல ஏறி எந்த சீட் ல வேணும்னாலும் உட்கந்துக்கலாம் இல்ல படுத்துக்கலாம் அந்த சீட்கள் வடமாநிலம் போரவங்காளுக்கு கொடுக்கப்படும் அதுக்கான ஆள் வரவரைக்கும் நாம அதுல உட்கந்துக்கலாம் அதுதான் அந்த கரண்ட் ரிசர்வசன் சீட்.அதுலயும் பல காமெடிகள் நடக்கும்.அப்படி தான் ஒரு முறை நான் பயணித்த பேட்டியில் ஒரு வெள்ளயன்(foreigner) வந்திருந்தார் அவரை நான் பார்த்துகிட்டே இருந்தேன் அவர் என்னை பார்த்து "ஹலோ" நு சொன்னார் நானும் பதிலுக்கு "ஹாய்" சொன்னேன்.

அவர் பக்கத்துக்கு காபின்ல போய் அப்பர் பெர்த்ல படுத்துகிட்டார். ஒரு அரை மணி நேரம் இருக்கும் ஒரு சேட் வந்து "அது என்னோட சீட்" நு ஆங்கிலத்துல சொல்ல அவர் எதிர்ல இருக்கும் அப்பர் பெர்த்ல மாறி படுத்துகிட்டார். ஒரு அரை மணி நேரம் இருக்கும் இன்னொருத்தார் வந்து அது அவரோடதுன்னு சொல்ல கடுபாகி போன அந்த வெள்ளையர் நான் உக்கார்ந்திருக்கிற சீட் எதிர் புறமா இருந்த அப்பர் பெர்த்ல படுத்துகிட்டார்.ஒரு பெரிய லகஜு ஒரு புத்தகம் வெச்சிருந்தார் அதை படுத்துகிட்டே படிச்சுட்டு வந்தார் ஒரு ஒரு மணி நேர பயணம் அவருக்கு எந்த தொந்தரவும் இல்லாம இருந்துச்சு. ஒரு நிறுத்தத்துல ஏறின ரெண்டு பேர் அவருடைய எடத்துக்கு வந்தாங்க அவங்க ரெண்டு பெரும் வடமாநிலத்தவங்க அவரை பார்த்து "எ ஹமாரா சீட் ஹே" என சொல்ல வெள்ளையர் திருதிருநு முழிச்சுகிட்டு எங்களை பார்த்தார். அவருக்கு அவங்க சொல்றது என்னனு புரியல திரும்பவும் படுத்துகிட்டார்.இந்த ரெண்டு பேருக்கும் என்ன சொல்றதுனே தெரியல இவங்க நினுகிடே இருக்கிறதை பார்த்து அந்த வெள்ளையர் கேட்டார் "வாட் டூ யு வான்ட் ?" இப்போ இவங்க ரெண்டு பெரும் திருதிருநு முழிச்சாங்க. அந்த வெள்ளையர் புரிஞ்சுகிட்டு சிரிச்சுகிட்டே "இஸ் திஸ் யுவர் சீட்" என கேட்டார் அதுக்கும் அவங்ககிட்ட இருந்து பதில் இல்ல. அதை பார்க்க ஒரே காமடியா இருந்துச்சு.அப்புறம் நான் வெள்ளையரிடம் விலக்கினேன் ஒரு வழிய அவரே புரிஞ்சுகிட்டு லகஜுஐ எடுத்துகிட்டு சிரிச்சுகிட்டே கிளம்பிட்டார். இதுகிடயில "துஜ்ஹி தேஹ்க தொ எ ஜான சனம்" பாட்டு பாடிகிட்டு ஒரு பொண்ணு, ஒரு பையன் காசு கேட்டு வந்தாங்க. அதுக்கப்புறம் அவரை சென்னை வந்து இறங்குற வரைக்கும் பார்க்க முடியல.

இப்படி பல சுவாரசியங்களும்,நகைச்சுவை சம்பவங்களும் நடக்கும் இடம் தான் ரயில். இப்படி என்னோட பயணம் வார வாரம் தொடந்து கிட்டு இருக்கு. அதே சப்போட்டா விக்குற பொம்பள, பட்டாணி விக்குற பொம்பள, கொய்யாப்பழம் விக்குற பொம்பள, டி சப்லியர், தரையை சுத்தம் செய்யும் காசு கேட்கும் உணமுற்ற பையன், பாட்டு பாடும் பையனும் பொண்ணும் என எல்லாரையும் டிவி ல வரும் வாரம் ஒரு முறை தொடர் மாதிரி வார வரம் பார்த்துகிட்டே எனது பயணம் தொடர்கிறது.ரயில் பயணத்தொட அனுபவத்தை சொல்லனும்னா சொல்லிகிட்டேபோலாம் அதுக்கு எல்லையே கிடையாது.இப்படியான ஒரு சுவாரசியமான பயணம் பஸ்லயோ, பிளைட்லையோ நீங்க பார்க்கவும் முடியாது,அனுபவிக்கவும் முடியாது.

என்னுடைய இந்த பயணம் எப்போ முடியும் எனக்கே தெரியாது ஆனா முடிய குடதுன்றது தான் என்னோட ஆசை...

Wednesday, May 12, 2010

The Funniest Flash Pics Ever Seen.!



Photobucket
model on the catwalk , turn , smile , then ...
lesson- keep walking, whatever happens in front of you..
-------------------------------
Photobucket

the worst pretender ever ...sibodo!
lesson - express yourself.. even if you are late to do so..
---------------------------------------------

Photobucket
this kid has potential in gymnastics
lesson - study something new from each mis-takes
---------------------------------

Photobucket
cat with bad eye-sight
lesson - keep your eyes open, even when you are sad, happy or tensed
-----------------------------------

Photobucket
this guy is cool ... but bad luck too...
lesson - never believe that you can rely on something for a long time..
---------------------------------------

Photobucket
ka me ha me haaaaa!!!!
lesson - never underestimate your power
----------------------------------

Photobucket
brazil vs argentina , hahaha..sengal..
lesson - one cannot play tricks on someone for a long time..
---------------------------------

Photobucket
wachaaa!!!! scissor legs ...
lesson- do your best, if you are attacking, or being attacked
-------------------------------------------

Photobucket
Woohooo! murder on the dance floor ??
lesson - concentrate more when you require more energy..
-------------------------------------

Photobucket
don't run on jogging machine when ur wearing jeans
lesson- do not try to hold on something which can change anytime..
------------------------------------

Photobucket
Ouch!! this must be painful !!
Lesson - Do not do a thing, without thinking..

Friday, April 30, 2010

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது எவ்வாறு? கோத்தபாயவின் சுய வாக்குமூலம்!





உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இந்திய சிறிலங்கா அதிகாரிகள் எவ்வாறு ஒரு குழுவாக இணைந்து முறியடித்தனர் என்பதை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

Indian Defence Review இற்காக திரு சசிக்குமார் என்பவருக்கு அளித்த விரிவான செவ்வியிலேயே இந்த ஏமாற்று நாடகத்தின் பின்னணியை கோத்தபாய போட்டு உடைத்துள்ளார். புலிகளை வெற்றிகரமாகத் தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் செவ்வியின் சில பகுதிகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

இந்த செவ்வியில் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் தொடர்பாக கோத்தபாய ராஜபச்ச தெரிவித்திருப்பதாவது:

கடந்த வருடம் ஏப்ரல் 24 ம் திகதி, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி உடனடிப் போர்நிறுத்தம் வேண்டி சென்னையிலுள்ள அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இச்சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர மேனன் என்னை அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்தியத் தூதுக்குழு ஒன்று அவசரமாக கொழும்பு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.

நான் உடனடியாகவே ஜனாதிபதி ராஜபச்சவின் அலுவலகத்திற்குச் சென்று அவரின் அனுமதியைப் பெற்று 5 நிமிடத்திற்குள்ளாகவே மீண்டும் மேனனைத் தொடர்பு கொண்டேன்.

முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் (No Fire Zone) ஷெல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம். இந்தியா சிறிலங்கா அதிகாரிகள் குழவாக மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு சிறந்த உதாரணமாக இது உள்ளது என இந்தச் செவ்வியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வெளியிடாத சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்.




வன்னியில் பேரழிவு யுத்தம் நடந்த காலப்பகுதியில் இந்திய இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் செயற்பாடுகள் பற்றி கோத்தபாய விரிவாக எடுத்துக் கூறியுள்ளதாவது:

இந்திய நிலைப்பாடு என்பது இந்த யுத்தத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருந்தது. 1987 ஆண்டு ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை வடமராட்சியில் உணவுப் பொட்டலங்களைப் போட்டது. அதன் பின்னான காலத்தில் இப்படியான நிலை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்தோம்.

மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணுவதிலும் இந்தியாவிற்கு உடனுக்குடன் நிலமைகளை தெளிவாக்குவதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

எமது பக்கத்தில் நானும், பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தியத் தரப்பில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரத்துறையின் செயலாளர் சிவசங்கர மேனன் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் விஜய் சிங் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டோம்.

நாம் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் தொடர்பிலிருந்தோம். சிக்கலான விடயங்கள் எழும்போதெல்லாம் நாம் கூடிப் பேசி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டோம். இதனால் எமது இராணுவம் எந்தவிதமான தடைகளும் இன்றி தமது இராணுவ நடவடிக்கையைத் தொடர முடிந்தது என கோத்தபாய இந்திய அதிகாரிகளுடன் இருந்த இறுக்மான உறவையும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதில் இந்தியா காட்டிய ஈடுபாட்டையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

கோத்தபாயவின் இந்த சுய வாக்குமூலம் இவ் உண்ணாவிரதம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த வருடம் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தபோது அன்றைய தினம் அதிகாலை எவருக்கும் அறிவிக்காது, தான் அண்ணா சமாதிக்கு முன்னர் திடீரென உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாகத் தெரிவித்திருந்தார். தமிழக இந்திய ஊடகங்களும் அவ்வாறே எழுதியிருந்தன.

ஆனால் கோத்தபாயவின் நேர்காணலில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு முதல்நாளே இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் தன்னைத் தொடர்பு கொண்டு ஒரு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ளமை இந்த உண்ணாவிரதம் என்பதே இந்திய அரசும் தமிழக முதல்வரும் இணைந்து நடத்திய நாடகமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் கோத்தபாய தனது நேர்காணலில், இந்திய அதிகாரிகளுடன் ஏற்பட்ட சந்திப்பை அடுத்து சகல இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக தாம் அறிக்கை விட்டதன் மூலம் தமிழகத்திலிருந்து எழுந்திருக்ககூடிய ஆபத்தை தவிர்த்துக் கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் முதல்வர் தனது உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, வன்னியில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்றும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தனக்கு அறிவித்துள்ளதாகவும் கூறியே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். திமுக ஆதரவு ஊடகங்களும் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வன்னியில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகவே பிரச்சாரப்படுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோத்தபாயவின் நேர்காணலைப் பார்க்கும்போது எழும் கேள்வி – இந்த உண்ணாவிரதம் முதல்வர் கருணாநிதியும் இந்திய அதிகாரிகளும் இணைந்து நடத்திய கூட்டு நாடகமா அல்லது இந்திய அதிகாரிகள் சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து கருணாநிதியை இத்தனை சுலபமாக ஏமாற்றிவிட்டார்களா என்பதுதான்.


source: email from - எல்லைத் தமிழன்
to tamilmantram

Monday, April 12, 2010

convert microsoftword to docbook(xml) openoffice - java

import com.sun.star.beans.PropertyValue;
import com.sun.star.comp.helper.Bootstrap;
import com.sun.star.comp.helper.BootstrapException;
import com.sun.star.frame.XComponentLoader;
import com.sun.star.frame.XStorable;
import com.sun.star.io.IOException;
import com.sun.star.lang.IllegalArgumentException;
import com.sun.star.lang.XComponent;
import com.sun.star.lang.XMultiComponentFactory;
import com.sun.star.sdbc.SQLException;
import com.sun.star.sdbc.XCloseable;
import com.sun.star.uno.Exception;
import com.sun.star.uno.UnoRuntime;
import com.sun.star.uno.XComponentContext;


public class Save
{
public static void main(String args[])
{
// Get the remote office component context
try {
XComponentContext xContext = Bootstrap.bootstrap();

// Get the remote office service manager
XMultiComponentFactory xMCF = xContext.getServiceManager();

// Get the root frame (i.e. desktop) of openoffice framework.
Object oDesktop = xMCF.createInstanceWithContext("com.sun.star.frame.Desktop", xContext);

// Desktop has 3 interfaces. The XComponentLoader interface provides ability to load components.
XComponentLoader xCLoader = ( XComponentLoader ) UnoRuntime.queryInterface(XComponentLoader.class, oDesktop);

PropertyValue[] myProperties = new PropertyValue[1];
myProperties[0] = new PropertyValue();
myProperties[0].Name = "Hidden";
// for open document and do not show user interface use "true"
myProperties[0].Value = new Boolean(false);

// Create a document
XComponent document = xCLoader.loadComponentFromURL("file:///F:/Rajesh/convert/Java1.5.doc", "_blank", 0, myProperties);





String storeUrl = "file:///F:/Rajesh/convert/Java1.5.xml";
// Save the document
XStorable xStorable = (XStorable)UnoRuntime.queryInterface(XStorable.class, document);
PropertyValue[] storeProps = new PropertyValue[1];
storeProps[0] = new PropertyValue();
storeProps[0].Name = "FilterName";
storeProps[0].Value = "DocBook File";

xStorable.storeAsURL(storeUrl, storeProps);
// close document
document.dispose();
XCloseable xcloseable = (XCloseable) UnoRuntime.queryInterface(XCloseable.class, document);
if(xcloseable!=null)
{
xcloseable.close();
}

} catch (IOException e) {
// TODO Auto-generated catch block
e.printStackTrace();
} catch (IllegalArgumentException e) {
// TODO Auto-generated catch block
e.printStackTrace();
} catch (SQLException e) {
// TODO Auto-generated catch block
e.printStackTrace();
} catch (BootstrapException e) {
// TODO Auto-generated catch block
e.printStackTrace();
} catch (Exception e) {
// TODO Auto-generated catch block
e.printStackTrace();
}
}
}

Thursday, April 8, 2010

ஏன் இந்த நிலை?


இன்றைய உலகம் - என், எனக்கு என்ற நிலையிலையே ஓடிக்கொண்டிருகிறது. கனவில் கூட அடுத்தவர் நலன் பற்றிய அக்கறை சிறிதும் எட்டிப்பார்பதில்லை. அடுத்தவர் துயர் துடைக்க எத்தனையோ உதவிகளையும், கொடைகளையும் செய்த வள்ளவர்கள் வாழ்த்த நாடு என இனிவரும் சந்ததியினரிடம் வரலாற்று சான்றுகளை காட்டினால் கூட "இவை அனைத்தும் உண்மையா?" என்று கேட்கும் நிலை வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. ஏன் இந்த நிலை எவரை பற்றியும் அக்கறை அற்ற நிலை.மனித குலத்தின் மகிமைக்கே பங்கம் விளைவிக்கும் நிலை.

பணம், பகட்டு எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கும் வசதி இது போன்றவைகள் மனிதனின் மனநிலையை குறுக்கிவிடுகிறது.தன்னிலை விட்டு சிந்திக்கும் திறன் குறைந்துவிடுகிறது.

ஒரு டி கடையில் டி குடிக்க குறைந்தது 3 - 5 ருபாய் செலவாகும்.ஆனால் இவர்களோ பெரிய ஹோடல்களயே அதிகம் விரும்பு போவார்கள்.அதுவும் AC அறையிலே ஒரு டியின் விலை 50 ருபாய் அதுவும் ஒரு சில பெரிய ஹோல்களில் பால் தனியாக, சர்க்கரை தனியாக
தந்துவிடுவார்கள் நாமாகவே தான் தயாரித்து கொள்ளவேண்டும்.அதற்க்கு டிப்ஸ் ஆகா 10 - 50 ருபாய் வரை கொடுப்பார்கள். டி என்பது சூடாக குடிக்க வேண்டிய ஒரு பானம் அதற்கு எதற்கு AC அறை. சுவை நன்றாக இருந்தால் கூட பரவில்லை அது மட்டமாகவே சில இடங்களில் இருக்கும். ஆனால் சில ரோட்டோர கடைகளில் கிடைக்கும் டி சுவை மிகுந்ததாய் இருக்கும்.அந்த 5 ருபாய் டிக்கு ஒரு இரண்டு ருபாய் சேர்த்து கொடுத்து பாருங்கள் உங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் அந்த டி யின் சுவையும் இரண்டு மடங்காய் பெருகி இருக்கும். ஒரு பிச்சைக்காரர் பிச்சை கேட்டால் கூட ஒரு ருபாய் கொடுக்காத இவர்கள் டிப்ஸ் ஆக 50 ருபாய் வரை கொடுப்பது ஏன் - இது தான் நாகரீகமா?.
நீங்கள் டிப்ஸ் ஆக 50 ருபாய் வரை கொடுக்கிறீர்களே அதில் ஒரு 10 ரூபாயை ஒரு பிச்சைக்காரருக்கு கொடுத்தல் ஒரு வேலை பசியாருவாரல்லவா? சிந்தியுங்கள் ....

பொதுவாக பெண்கள், வீடு தேடி வரும் காய்கரி கார பெண்ணிடம் 5 ருபாய் கிரைக்காக 1 ருபாய் குறைக்க சொல்லி அரை மணி நேரம் சண்டை இடுவார்கள். ஆனால் அதே பெண்கள் reliance அல்லது more சூப்பர்மார்க்கெட் சென்றார்கள் என்றால் அதே 5 ருபாய் கீரையை 10 ருபாய் கொடுத்து வாங்குவார்கள் இவர்களை என்னெவென்று சொல்வது.நம் வீடு தேடி வரும் காய்கறிக்கார பெண்ணோ/ஆணோ/ முதியவரோ/மூதாட்டியோ யாராக இருந்தாலும் இந்த வேகாத வெயிலிலே நமக்காக வருபவர்களுக்கு பேரம் பேசாமல் அந்த காய்கறிக்கான காசை கொடுப்பது தான் மனிதாபீமானம்..

எதோ ஒரு சூழ்நிலையில் நாம் இரவு வேலைகளில் பஸ்சிர்க்காக காத்துக்கொண்டிருபோம், பஸ் வரத்தும் குறைந்திருக்கும் நேரமாயிருக்கும் அது. அந்த வேலையில் யாராவது ஒருவரிடம் lift என்று கேட்டால் 100 இல் 99 பேர் வண்டியை சிறுது கூட ஸ்லொவ் செய்யாமல் போய்விடுவார்கள். அந்த ஒருவர் மட்டுமே நிற்பதற்கான வாய்ப்புகள் உண்டு அவரும் நாம் செல்லும் இடத்திற்கு செல்லாமல் அதற்க்கு முன்னதாகவே இருக்கும் இடத்திற்கு செல்பவராக இருப்பார்.lift என கேட்பவரை பார்த்தால் நல்லவரா இல்லை கெட்டவரா என்பது கூடவா தெரியாது.அது சரி மனிதனின் மனதையே புரிந்துகொள்ள தெரியாதவர்களுக்குமுகத்தை பார்த்து எப்படி கண்டுபிடிக்க போகிறார்கள். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பதை தெரியாதவர்கள். எனது பெருமைக்காக நான் இதை சொல்ல வில்லை, பள்ளிசிறுவர்கள் , குடிகாரர்களை தவிர என்னிடம் lift என்று யார் கேட்டாலும் கொடுத்துவிடுவேன்.உதவுவதால் என்றைக்குமே உங்களுக்கு எந்த கெடுதலும் வந்துவிடபோவதில்லை முன்னேச்சரிக்கை அவசியமே.ஆனால் உதவுங்கள்.

ஒரு இந்தியன் வெளிநாட்டுக்கு செல்கிறான் என்றால் அங்கே உள்ள சட்டதிட்டங்களை உமியளவும் பிசகாமல் அப்படியே கடைபிடிப்பான்.அதே இந்தியன் நம் நாடு சட்டதிட்டங்களை சிறிதளவும் மதிப்பதில்லை."இந்த்யவுல பப்ளிக்ல கிஸ் அடிக்க முடியாது பாரின்ல பப்ளிக்ல பிஸ் அடிக்கமுடியாது" என்பது நகைசுவைகாக சொல்லப்பட்டிருந்தாலும்
அதில் ஒவ்வொரு இந்தியனும் வேட்க்கி தலைகுனிய வேண்டிய உண்மை ஒளிந்துள்ளது என்பது யாருக்கும் தெரியாமல் இல்லை.


இது போன்ற நிலை நீடித்தால் எது நாகரீகம் ... எது நல்லவை.. எது மனிதாபிமானம் என்ற கேள்விகளுக்கு புதையுண்ட டினோசர்களை ஆராய்வதை போன்ற ஆராய்சிகள் மேற்கொள்ள வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை!!!!!!!

Monday, April 5, 2010

நான் - கேபிள் அண்ணன் - லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்



















நான் ஒன்றும் பெரிதாய் புத்தகங்களையோ பதிவுகளையோ விரும்பி படிப்பவன் அல்ல. ஆனால் எழுதுவதில் மிகவும் ஆர்வமுண்டு. படிப்பதை விட எழுதுவதே அதிகம் விரும்புபவன் நான். அப்படியிருக்க "வெண்ணிற இரவுகள் " கார்த்திக்கின்(X -Colleague) பதிவுகளை மட்டுமே விரும்பி படித்து வந்தேன்.

எனக்கு கேபிள் அண்ணனை பற்றி அறிமுகம் இல்லாத நாட்களில் அவரை (ப்ளாக் லிங்க்) எனக்கு அறிமுகப்படுத்தியவர் கார்த்திக். நான் இப்போது பணிபுரியும் அலுவலகத்திலே இருவர் கேபிள் அண்ணனின் பதிவுகளை தினமும் படிக்கும் வாசகர்கள். நான் கேபிள் அண்ணனின் முதல் பதிவை படித்தவுடன் அவரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இவ்வளவு நாட்களாக இவருடைய பதிவுகளை படிக்காமல் மிஸ் செய்துவிட்டோமே என்று கூட நினைதேன்.

அவருடன் chat இல் அதிகமா பேச ஆரம்பிதேன். எந்த ஒரு ego இல்லாமல் அவ்வளவு எளிமையாகவும், பண்பாகவும் பேசகூடிய ஒரு பண்பாளர் அவர்.

அப்துல்லா- சிவா - டேனியல் கதையா படித்து விட்டு அவருடன் தொடர்பு கொண்டு இந்த கதையா ஒரு short film ஆக எடுத்தல் மிக அருமையை இருக்கும் என்று சொன்னேன் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் அதை ஏற்று கொண்டு அதற்க்கு என்ன செலவாகும் என்பதையும் தயாரிப்பாளர் இருந்தால் சொல்லுங்கள் என்றும் சொன்னார். மற்றவர்கள் கருத்துக்கு மரியாதை தருபவர்.


அவரை முதல் முறையாக அடையாரில் அவருடைய புத்தகத்தை வாங்குவதற்காக சந்தித்தேன். பார்பதற்க்கு மிக எளிமையாகவும் எளிதில் நெருங்கக்கூடிய சுபவமுமாய் இருந்தார். நாங்கள் இருவரும் அன்று மதிய உணவிற்காக அடையாரில் உள்ள "ரெயின் போறேஸ்ட்" க்கு சென்றோம். நாங்கள் 40 நிமிடம் உள்ளே நின்றவாறு காத்து கொண்டிருந்தோம். அப்போது கேபிள் அண்ணன் என்னை பற்றி எல்லாவற்றயும் கேட்டு கொண்டிருந்தார்.புதிதாக ஒருவருடன் பேசிகிறோம் என்ற எண்ணமே தோன்றாமல் பார்த்து பழகிய நண்பர் போல் அவரை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். போனில் அழைத்தாள் பிஸியாக இருந்தாலும் கூட போனை கட் செய்வதோ அல்லது "பிஸி அப்புறம் பேசுகிறேன்" என்றோ இதுவரை என்னிடம் அவர் சொன்னது இல்லை. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் போனில் நான்கு வார்த்தைகளாவது பேசிவிட்டுத்தான் வைப்பார்.


இது போன்ற நற்குணங்களும், தலைகனமற்ற அவருடைய பண்பும்தான் அவர் மென்மேலும் உயர்வதற்கான ஒரு கருவியை இருந்திருகிறது என்று சொல்லலாம்.அவருடைய எழுத்துகளின் மூலம் படிக்கும் நம்மை அந்த கதாப்பாத்திரமாகவே மாற்றக்கூடிய வல்லமை அவருடைய எழுத்துக்கு உண்டு. அவர் எழுத்து நடை படிப்பவர்களை காட்சி நடக்கும் களத்திற்கே கொண்டு செல்லும் மந்திர கொண்டதாய் உள்ளது.


லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும் விமர்சனம்

முத்தம்:

ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் அந்த பழமொழிக்கு இந்த கதையே ஒரு சான்று.இந்த ஒரு கதையே அவரின் கதை தொகுப்புகளின் சிறப்பை காட்டிவிடுகிறது.மிகவும் பரபரப்பை, முடிவு என்ன என்று அறிய துண்டும் வகையில் இந்த கதையை கேபிள் அண்ணன் படைத்துள்ளார் அதுவும் அவரது பாணியில். ரமேஷின் கதாபத்திரத்தை மிகவும் அருமையாக சொல்லியிருகிறார் கிடைகும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் நல்ல எண்ணத்துடன் உதவி செய்யும் ரமேஷ் ஒரு வகையில் அவளை காதலிக்கிறான்....

லெமன் ட்ரீயும்..இரண்டு ஷாட் டக்கீலாவும்:

நாளை என்பது இல்லாத ஒன்று இன்று இந்த நொடி மட்டுமே நிரந்தரம் என்பதை சொல்லும் கதை.வாழ்கையை அனுபவிக்க வயது ஒன்றுமே பெரிய தடையே இல்லை வாழ்கையை எப்படி எடுத்துகொள்ளவேண்டும் என்பதை பற்றிய கதை.

கல்யாணம்:

வாழ்கையில் settle ஆவதற்காக கல்யாணத்தை தள்ளி போடும் இளைஞன். கல்யாண வயதைக் கடந்தும் கல்யாணமாகாமலிருக்கஅதனால் அவனுக்குள் ஏற்படும் மாற்றங்கள், நிகழ்வுகள் பற்றி கொஞ்சம் விரசம் கலந்து சொல்லப்பட்டிருந்தாலும்.மிகவும் அருமையாகத்தான் சொல்லியிருகிறார்.

ஆண்டாள்:

சிறுவயது காதல் என்பது ஒரு ஈர்ப்பு என்றாலும் கூட அது எல்லோருடைய மனசில் பசுமரத்து ஆணி போல் என்றுமே நிலைத்திருக்கும். அந்த உணர்வை அருமைய சொல்லியிருகிறார். இருந்தாலும் ஆண்டாள் அவனை உதாசீனபடுத்தி இருக்ககூடாது...

ஒரு காதல் கதை, இரண்டு கிளைமாக்ஸ்:

ஒரு அழகான காதல் கதை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கும் விதம் அருமை.அது சரி கதையில் தன ரெண்டு கிளைமாக்ஸ் இருக்கமுடியும்.. லைப்ல ?

தரிசனம்:

ஒருவனின் மனைவி சாமியாரின் மேல் கொண்ட அதீத பக்தி அவரிடம் போனால் குறை நீங்கும் என்று கணவனை வற்புறுத்தி அவரிடம் அழைத்து செல்கிறாள்.இன்றைய காலகட்டத்துக்கு தேவையான ஒரு கதையே.

போஸ்டர்:

ஒரு படத்திற்கு போஸ்டர் அடிப்பார்கள், எதோ விளம்பரத்திற்காக போஸ்டர் அடிப்பார்கள்.அனால் கேபிள் அண்ணன் ஒருவரால் மட்டுமே போஸ்டரை வைத்து கதை(படம்) சொல்ல முடியும். மிகவும் அருமையாக சொல்லியிருகிறீர்கள்...

துரை.நான்.ரமேஷ் சார்:

காதலித்த ஒரே பாவத்திற்காக ஒரு பெண் எப்படி எல்லாம் சீரழிகிறாள் தனது காதலனுக்க காதலுக்காக என்பதை தெள்ள தெளிவாக சொல்லியிருகிறார். முடிவு சற்று பயங்கரமாக இருந்தாலும் அது சரியான முடிவே.. சினிமா பின்னணியை வைத்து பின்னப்பட்ட ஒரு கதை ...

என்னை பிடிக்கலையா:

ஒரு பெண் தன காதலனிடம் என்ன எதிபர்கிறாள் அதே காதலன் கணவனானவுடன் என்ன எதிர்பார்கிறாள் என்பதை சொல்லியிருகிறார். அப்படி கணவனிடம் கிடைக்காத ஒன்று வேறொருவரிடம் கிடைக்கும் பொழுது பெண் எப்படி மாறுகிறாள்.அவள் மன உணர்வு எப்படி பட்டது .காமத்தையும் தண்டி அவள் என்ன எதிர்பார்கிறாள் என்பதை பற்றிய கதை இது..

காமம் கொல்:

சாமியார்கள் எப்படி என்பதை கடைசி ஒரு வரியில் நச்சென சொல்லியிருக்கிறார் கேபிள் அண்ணன்.காமத்திற்கு வடிகாலாய் அவர் என்ன செய்கிறார் என்பதை கதையா படித்தால் உங்களுகே புரியும்


ராமி...சம்பத்...துப்பாக்கி:

கதையின் ஆரம்பமே திடும் திடும் இசையுடன் :-) தன்னை விரும்பி உறவு வைத்துகொண்டவன் தான் யார் என்று தெரிந்தவுடன் அவன் மாறும் மனநிலையை ஏற்றுக்கொள்ளது நடக்கும் சுவாரசியமான கதை....

மாம்பழ வாசனை:

காதல் எப்படி எல்லாம் ஒருவனை மாற்றுகிறது என்ன அவனை ஈர்க்கிறது என்பதை பற்றிய கதை ...

நண்டு:

ஒரு வெள்ளந்தி மனைவியின் மனநிலை தன் கணவனுக்கு கான்செர் எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் பதைபதைக்கும் குழந்தையாய்... மிகவும் அருமையான உருக்கமான கதை.



இவரின் கதைகள் மனஉணர்வை விவரிக்க கூடியவையாய் காட்சிகளை கண்முன் கொண்டுவரும் திறன் கொண்டவையாய் இருப்பமையால்.. நான் கேபிள் அண்ணனிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன்.. அது என்னவென்றால் முடிந்தவரை அவருடைய அணைத்து கதைகளை ஒரு short storyஅக எடுக்கவேண்டும் என்பதே...

இதன் கோரிக்கை நியாயமானது என்று கருதும் அனைவரும் அவரிடம் இந்த கோரிக்கையை வைக்குமாறு கேட்டுகொள்கிறேன்.