Tuesday, January 6, 2009

எனது கவிதைகள் (குமுரல்கள்)

மும்பை குண்டு வெடிப்பு ( தாஜ் ஹோட்டல் )
1. வர்த்தகத்துக்கு பெயற்ப்போனது...
இன்று தீவிரவாதிகளுக்கு இறையாகிக்கொண்டிருக்கிறது.....
பெயர் மட்டும் அல்ல போனது உயிரும் தான்...
"மும்பை" (இன்று "பைமும்")
தீவிரவாதிகள் ஏன் இழுக்கிறார்கள் நம்மிடம்
"வம்பை"......

அம்பேத்கர் சட்டக் கல்லூரி சம்பவம்
1. சட்டம் ஒரு இருட்டறை ... சட்டக் கல்லூரியும் இன்று இருட்டரையானது..... பட்டப்பகலில் வெட்டவெளியில் கல்லூரி கல்லரையாய் மாறியதை.. கண்டும் தடுக்க திரணியற்றவர்கள்...! பசுவிர்காக தன் மகனை கொன்ற .. மனுநீதி வாழ்ந்த வரலாற்றை பொய்யாக்கி போனதே...
2. சட்டம் பயிலும் இடத்தில்... குற்றம் பழகும் கொடூரம்... இதற்காகவா இவர்களை பெற்றார்கள்.... பத்து மாதம் சுமந்து...
வெட்கக்கேடு....... மிருகங்களை பெற்றததற்கு.....

இலங்கை போர்.. ஈழ தமிழன்...
1. இவர்கள் உடல் மட்டும் என்ன கல்லால் செய்ததா...
இவர்கள் உடலில் மட்டும் என்ன பாக்கையா (பாதரசம்) ஓடுகிறது....
யுத்தம் தன் சத்தத்தை உயர்த்தி கொண்டிருக்க...
இவர்கள் காதுகளில்(கண்களில்) மட்டும் ஏன் ஒ(ளி)லிக்க வில்லையாம்..
இந்த யுத்தத்தின் சுவடுக்களும், சிதறல்களும்.....
இலங்கை அரசே உன்னால் (நிலை) நிறுத்தமுடியாதது....
யுத்தத்தை மட்டும் அல்ல நாட்டையும் தான்...

2. யுத்தத்திலே வரும் சத்தத்திலே....
மொத்தத்திலே சிந்தும் ரத்தத்திலே..
பித்தத்திலே மனம் ஈழத்திலே....
வாழும் எங்கள் உயிர்களே...

3. யுத்தம் விடும் சத்தம்... அதனால்
நித்தம் விழும் ரத்தம் ... ஆனது
பித்தம் என தத்தம் .... வாழ்வை
தேடும் இந்த ஈழம்....

தீவிரவாதி..
1. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்தேனே... திருமூலர் .......................
உயிரை எடுத்தேன் என் உடல் வளர்தேனே... தீவிர(வாதி)மூடர் ..................


5 comments:

Seetha said...

Kalakurae rajee...superb

rajeshkannan said...

Thanks a Lot for your comment

Mahudees said...

every one are better than other.....
Nice ones........

vidivelli said...

எல்லாவற்றையும் நினைக்க வலிக்குது.உண்மைகளை வரித்திருக்கிறீங்க.........

மிக மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........

rajeshkannan said...

Thanks Vidivelli