1. கூடையிலே வந்தவனே ....

கோடி பல தந்தவனே.....
நல்லவரில் தூயவனே...
நட்பினில் நீ முதல்வனே...
கவசக்குந்தலத்தை கொண்டவனே...
பார் போற்றும் வல்லவனே...
துரியோதணானின் தோழனே...
கர்ணா.............
2008 இல் சில கொடுமைகள்
1. நாட்டில் நடக்கும் கொடுமைகள் கோடி... அன்று அதை தான் சொன்னான் பாரதி பாடி.... நாட்டில் உள்ளது ஆயிரம் நதிகள்... அதில்
கலந்து ஓடுது மக்களின் ரத்த துளிகள்....
பிறந்த நாடு என உயிர்விட்டவர் பலர் .. இன்று
பிறந்த நாள் என உயிர் எடுப்பவர் சிலர்...
பார் போற்றும் வல்லவர்கள் வாழ்ந்த நாட்டில்... இன்று
உயிர் அற்று போய் கிடைக்கிறார்கள் சுடுகாட்டில்...
சிந்தியுங்கள் செயல்படூங்கள்
1. இயற்கையின் சீற்றத்தை தடுப்பவர்கள் எவரும் இல்லை.... அதன் விழைவுகளை தடுப்பவர்களும் எவரும் இல்லை...மனிதனின் சீற்றம் அதனால் ஏற்படும் மாற்றம் .... இவைகளை கூடவே ஒன்றும் செய்ய இயலவில்லை ?அறைக்குள் உட்கார்ந்து கொண்டு உலக அமைதியாயை பேசுவோரால்.. சிந்திக்கத் தெரிந்தும் மனிதன் சிந்திப்பதில்லை.... காலத்தின் மாற்றங்களை முன்னேற்றங்களை சிதைக்கும் சக்திகளை....என்ன செய்ய போகிறார்கள் இந்த நாட்டை ஆள்பவர்கள்.....அரசியல் புள்ளிகளுக்கு கொடுக்கும் பாதுகப்பில்...பாதியை கூட மக்களுக்கு கொடுப்பதில்லை.... தாய் மண்ணாம் தாய் மடீயம் இந்தியாவின் பிள்ளைகளுக்குள்....என் இந்த பிரிவினை.... சிந்தியுங்கள் செயல்படூங்கள்... (சிந்திக்க தெரிந்தவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மூடன்).

மென்பொருள் நிறுவனத்தின் நிலை..(சத்யம்)
1. மென்பொருள் நிறுவனத்தில் மட்டும் அல்லாமல்... பிஜ்ஜ கார்நர்யும், ஸ்பெந்ஸர் ப்லாஸவயும் நிரப்பியவர்கள்... இன்று சிற்றுண்டி அங்காடி நோக்கி போய் கொண்டிருக்கின்றார்கள்... தாழ்ந்தது இவர்கள் மட்டும் அல்ல இவர்கள் நிறுவனமும் தான்.... கிடைக்கும் பணத்தை செலவிட இடம் தேடுப்பவர்கள்..... இன்று வேலையை தக்க வைக்க வழி தேடுகிறார்கள்.... இனியாவது இவர்களால் மலையாய் போன விலைகள்..... குறையுமா என இவர்களே ஏங்கும் காலம் வந்துவிட்டது... சத்யம், சத்தியமில்லாமல் சத்தமில்லாமல்....
இன்று உண்மையில் நடந்தது.....(ஜனவரி 08 09)
1. அலுவலகம் செல்ல மனமில்லாமல் கிளம்பிய எனக்கு...
காலை உணவை மட்டுமே எண்ணத்தில் வைத்து...
வாகனத்தை செலுத்தியவன் இடையே குறுக்கிட்ட...
நாய்க்கு தீயவன் ஆனேன் வலியால் துடித்த அதனை..
பார்த்த மனம் பதைபதைத்தது.... சாதாரண மனிதன்...
என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை....
ஆனால் உயரிய இடத்தில் இருப்பவர்களுக்கு....
என்னை போன்ற உணர்வுகள் தோன்றாமல் இருக்குமா......
நாட்டில் நடக்கும் கொடுமைகளை கண்டு...
ஹைக்கூ

1. காய்கறி கூடை நசுங்கிய பிஞ்சுகள் ....
ஷார் ஆட்டோவில் குழந்தைகள்...
2. சூரியன் மேற்கில் உதிப்பதில்லை...
அரசியல் வாக்குறிதிகள்
3. சம்பளம் வரவில்லை ......
சிக்னலில் பிச்சைக்காரன்....
கனவு....
குழந்தையாய் தொட்டிலிலே நான்....
கனவு....
தொட்டிலிலே என் குழந்தை
வீரத்தமிழன் மரணம்
துயர் தன்னை வாட்டினாலும்...
தன் இனம் தன்னை காக்க இருக்கிறான்
ஒருவன் என்று...
நினைத்தவர்கள் வீதி இன்று ????