வானம் தொட்டு விடும் தூரம் தான்...
உணவு பசியை போக்க ...
தண்ணீர் தாகத்தை போக்க..
வாசணை(நறுமணம்) துர்நாற்றத்தை போக்க ..
வயோதிகம் வாலிபத்தை போக்க..
சிரிப்பு கண்ணீரை போக்க ..
உடை நிர்வாணத்தை போக்க..
மழை வெப்பத்தை போக்க..
வெயில் குளிரை போக்க...
எமன் உயிரை போக்க...
பொதுநலம் சுயநலத்தை போக்க...
ஆலயம் கவலையை போக்க..
பணம் ஏழ்மையை போக்க ...
குடி குடியை போக்க...
நன்மை தீமையை போக்க ...
............................................................
எல்லாவற்றிற்கும் மாற்று உண்டு...
வானம் தொட்டு விடும் தூரம் தான்...
Saturday, November 21, 2009
Tuesday, November 10, 2009
மண் சட்டி ......
குருராஜா ஒரு அரசாங்க அலுவலகத்திலே சிறப்பான சம்பளத்துடன் வேலை செய்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவி ஷீலா மற்றும்
9 வயதான மகன் சித்தார்த் . ஒரு சிறப்பான குடும்ப தலைவனாய் இருந்தானே தவிர ஒரு நல்ல தனயனாய் அவனது பெற்றோருக்கு அவன் இருக்க வில்லை. குருராஜவிர்க்கு 9 அண்ணன்கள் , 3 அக்காக்கள் அவனுடைய தந்தைக்கு இவர்களை கரை எற்றுவதற்குள்ளகாவே 60 வயதை கடந்து விட்டார்.
தனது மனைவியையும் ஒரு ஆண்டுக்கும் முன் இழந்து விட்டார். குருராஜா கடைசி பிள்ளை என்பதால் அவனுக்கு எல்லா சலுகைகளையும் வழங்கினார்.
அவனும் பெற்றோர்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவனாய் இருந்தான்.எல்லா பிள்ளைகளும் தன் தாய் தந்தையை உதறினாலும் அவர்களை நான் காப்பாற்றுவேன் என்று அவர்களை தன்னுடனே வைத்துகொண்டான்.
திருமணமான 3 ஆண்டுகளிலேயே தான் தாய் தந்தையரை பாரமாய்நினைக்க துவங்கினான். அவர்களுக்கான பணிவிடைகளை செய்ய மறந்தான். அதனலயே அவனது தாய் நோய்வாய்பட்டு ஒரு ஆண்டுக்குமுன் இறந்து போனார்.
இன்று இவன் தந்தைக்கோ 70 வயது, நடக்க முடியாமல் கிடையாய் படுத்திருந்தார். அவருக்கென தனியாக வீட்டருகே ஒரு ஓலை குடிசையை உருவாக்கி அங்கே ஒரு கயிற்று கட்டிலிலே கிடத்தினான் பெரியவரை குருராஜா.
அங்கே அவருகென ஒரு மண் சட்டியிலே சாப்பாடு போடுவது வழக்கம். அதுவும் தான் வீட்டு வேலைக்காரியிடம் கொடுத்து தான் போடா சொல்வான். இதை அவனது மகன் சித்தார்த் தினமும் பார்த்துக்கொண்டிருபான். அவனோ அவனது மனைவியோ இந்த பெரியவர் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பி பார்க்கமாட்டார்கள். சித்தர்த்தையும் போக விட மாட்டார்கள் இருப்பினும்,
சித்தார்த் யாருக்கும் தெரியாமல் அவனது தாத்தாவை பார்க்க போவதுண்டு அப்போதெல்லாம் அவனுக்கு ஒரு கதை சொல்வார் அந்த பெரியவர்.
நாற்றமும் அசிங்கமுமாய் இருந்தாலும் அவனுடைய தாத்தாவின்
மேல் அவனுக்கு கொள்ளை ப்ரியம்.
ஒரு நாள் அவர் இறந்துபோகவே சித்தார்த் துடி துடித்துப்போனான். குருராஜா இறுதி சடங்குகளை முடித்து விட்டு வீடு திரும்பினான்.வந்தவுடன் குடிசைக்குள் நுழைந்தான் அங்கே இருந்த மண் சட்டியை வெளியில் எடுத்து கொண்டு வந்தான்.அதை பார்த்த சிட்தார்த் "அப்பா என்ன பண்றீங்க" அதற்க்கு குருராஜா "இந்த சட்டிய கொண்டு போய் வெளியிலே தூக்கி போட போறேன்டா " என்றான். அதை கேட்ட சித்தார்த் "அப்பா வேண்டாம் பா அதை தூக்கி போடாதீங்க, அது இங்காயே இருக்கட்டும் நாளைக்கு நீங்க வயசானதுக்கபுரம் உங்களுக்கு சாப்பாடு போட அது பயன்படும் " என்று சொன்னதை கேட்ட குருராஜவிற்கு நெஞ்சிலே சூடு வைத்தது போல் ஆனது.
சட்டியை கீழே தவற விட்டான் உடைந்தது மண் சட்டி, உடைந்தது மண் சட்டி மட்டும் அல்ல அவனது மனசும் தான்.
பின் குறிப்பு: எங்கோ.... எதிலோ படித்தது....
Saturday, November 7, 2009
நம்பிக்கை.....
குமாரசுந்தரம் அரசு அலுவாலகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் மதுரையில் வசித்து வருகிரார். அவருக்கு ஒரு மனைவி சுசீலா,ஒரு மகன் மனோகர் , இரண்டு மகள்கள் பூர்ணிமா மற்றும் பிரியா . மகனை டிப்ளோமா படிக்க வைத்தார். அதற்கு மேல் அவரால் மனோகரை படிக்க வைக்க இயலவில்லை.
எனவே மனோகர் சில ஆண்டு காலம் சென்னையிலே பணியாற்றினான் பணியாற்றியவரே பொறியியல் பட்டபடிப்பையும் படித்து முடித்தான்.தன் நண்பனின் அண்ணன் உதவியால் பெரிய நிறுவனத்திலே ஒரு நல்ல பணி கிடைக்க பெற்றான்.
படிக்கும் காலத்திலேயே பணியாற்றிய முன்னனுபவம் இருந்ததால் சிறப்பான ஊதியமும் கிடைக்க பெற்றான். சிறிது காலம் கழித்து அவன் அமெரிக்க அனுப்பப்பட்டான் அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து மணந்து கொண்டு அங்கேயே இருந்து விட்டான். மனோகருக்கு தானே படித்து வாழ்கையில் உயர்ந்தான் என்ற அகம்பாவம் தன் தந்தை தனக்கு என்ன பெரிதாக செய்துவிட்டார் என்ற சின்ன புத்தித்தனம் ..தன் மகன் தனக்கு பிறகு தனது குடும்ப்பத்தை காப்பாற்றுவான் என்ற அவரது நம்பிக்கை கானல் நீரானது...
சுந்தரம் சோர்ந்து விடவில்லை தங்கமாய் தனது மகள்கள் இருகிறார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்கையை ஓட்ட தொடங்கினார். இன்று பத்து ஆண்டு காலம் ஓடிவிட்டது மனோகர் திருமணம் முடிந்து. இப்போது பூர்ணிமா பொறியியல் நான்காம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள். சுந்தரம் ஓய்வு பெற்று ஒரு ஆண்டு ஆகிறது மாதாமாதம் ஓய்வுதியம் கிடைக்கிறது ஆனால் தன் ஓய்விர்க்கான
மற்ற தொகைகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.அதற்காக அவர் அனுதினமும் அரசாங்க அலுவலகத்திற்கு சென்று வருகிறார் அதிகாரிகளும் "நாளை" "நாளை " என்று நாட்களை கடத்திகொண்டிருந்தனர். சுந்தரம் நேர்மையை பணியாற்றியயதலோ எனவோஅவரால் சைக்கிளை தவிர வேறு வாகனங்கள் வாங்க இயலவில்லை.
இன்றும் வழக்கம் போல் கிளம்பினார்.பஸ்ஸில் ஏறி இருக்கையில் அமர்ந்தார். அவரருகே இன்னொரு பெரியவர் வந்து அமர்ந்தார் சற்று தூரம் சென்றிருக்கும் அந்த பெரியவர் சுந்தரத்திடம் பேசலானார்.. இருவரும் பேசிகொண்டே பயணித்தனர். அவர்களது முன் சீட்டில் "j.பாஸ்கர்ராஜ் loves k.பூர்ணிமா" அதை பார்த்த பெரியார் சுந்தரத்திடம் "பாருங்க சார் என்ன எழுதிருகாங்கனு. இதுங்க எல்லாம் எப்படித்தான் முன்னேற போகுதோ தெரியல" அதை பார்த்த சுந்தரத்திற்கு ஒரே அதிர்ச்சி தனது மகளின் பெயர் எழுதியிருப்பது அவருக்குள் இடியாய்
இறங்கியது. சற்று கலங்கி போனார், இருப்பினும் தன் மகள் மேல்
அதிக நம்பிக்கை கொண்டதால் வேறு யாராவது இருக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டு தன் வேலைகளை முடித்து கொண்டு வீடு திரும்பினார். பணம் கிடைத்த சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள அன்று மாலை நண்பரை பார்க்க பக்கத்து தெருவிற்கு புறப்பட்டார் செல்லும் வழியில் முருகன் கோவில் ஒன்று உள்ளது கடவுளை வணங்கி விட்டு செல்லலாம் என்று உள்ளே சென்றார். அங்கே தனது மகளும் தாடியுடன் கூடிய ஒரு வாலிபனும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தார.தன் மகள் மேல் வைத்திருந்த நம்பிக்கை பொய்யாகி போன விரக்தியில் விட்டுக்கு திரும்பி சென்றார் . அவளும் மனோகர் செய்ததை போல் செயடுவிடுவாலோ என்ற கவலை அவரை தொற்றிக்கொண்டது ...
அவர் மனைவி சுசீலா "என்னங்க அதுக்குள்ள வந்துடீங்க?". "ஒண்ணுமில்ல
லேசா தலை வலிக்குது நான் கொஞ்சம் rest எடுக்கிறேன்" என்று சொல்லிகொண்டே தனது அறைக்குள்ளே நுழைந்து தாளிட்டு கொண்டார். இரவு 12 மணி ஆகியும் அவருக்கு உறக்கம் பிடிக்கவில்லை.பணம் கிடைக்காமல்
இருந்தபோது கூட நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருந்த சுந்தரம் இன்று பணம் கிடைத்தும் தனது மகளை நினைத்து மனவேதனையால் துடித்து கொண்டிருந்தார் விடிந்தும் விட்டது... அன்று வழக்கம் போல் பூர்ணிமா கல்லுரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள்... சுந்தரம் எழுந்து ஹாலுக்கு சென்று சோபாவிலே அமர்ந்து மனமற்றவராய் செய்தித்தாளை புரட்டலானார். அப்போது பூர்ணிமா "அப்பா நான் கிளம்புறேன் பா" என்று சொல்லிக்கொண்டே கிளம்ப முற்பட்டால் அப்போது சுசீலா "ஏண்டி சாப்டுட்டு போடி" "வேண்டாம்மா" என்று கிளம்பிவிட்டாள்.
அரை மணி நேரம் கழித்து பூர்ணிமா கோவிலிலே பார்த்த பையனுடன் வீட்டிற்க்கு திரும்பி வந்தால்.அதை பார்த்த சுந்தரத்திற்கு தூக்கி வாரி போட்டது. அதற்குள்ளகாவே இருவரும் உள்ளே வந்து விட சுசீலா "என்னடி காலேஜ்க்கு போகாமா இங்க என்னடி பண்ற". "அம்மா உங்க ரெண்டு பேர்கிட்டயும் முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும் கொஞ்சம் பொறுமையா கேளுங்க ப்ளீஸ்.. இவர் தன் பாஸ்கர்ராஜ் காலேஜ்ல என்கூட படிக்கிறார் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்" இடையில் குருகிட்ட சுசீலா "என்னடி உனக்கு என்னை தைரியம் இருந்த எங்க கிட்டயே வந்து இந்த விஷத்தை சொல்லுவா அதுவும் அந்த பையனை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து. என்னங்க அவ பாட்டுக்கு பேசிட்டு இருக்க நீங்க எதுவும் சொல்லாம அமைதியா உக்கந்திருகீங்க..? ".
அதற்கு சுந்தரம் "என்ன சொல்ல சொல்ற நமக்கு குடுத்து வெச்சது அவ்ளோ தான்" என்று சொல்லிவிட்டு மௌனமானார். பாஸ்கர்ராஜ் "சார் நீங்க எங்களை தப்ப புரிஞ்சுகிடீங்க நான் தன first உங்க பொண்ணை லவ் பண்ணினேன் அவ ரொம்ப நாள் ஒத்துகல உங்களை பத்தியும் உங்க family பத்தியும் எவ்ளோவோ விஷயம் என்கிட்டே சொல்லிருக்க, மனோகர்னால ஏன்கனவே நீங்க நொந்து போன விஷயம் எல்லாம் எனக்கு தெரியும். அதனால் தன் நாங்க ஒரு முடிவு பண்ணிருகோம். அது என்னனா இன்னும் 6 வருஷதுக்குள்ள என்னோட பாமிலிக்கு தேவையான எல்லா விஷயங்களும் நான் செயதுமுடிசிடுவேன் உங்களோட பாமிலி தேவைகளை பூர்ணிமா முடிச்சிடுவாள், ப்ரியாவின் படிப்பு மற்றும் கல்யாணம் முதற்கொண்டு எல்லாத்தையும் முடிச்சிட்டு உங்களோட என்னோட parents permission ஓட marriage பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிருகோம் சார்"."
ஆமாம் பா அதனால தன் ப்ரியாவுக்கு கூட தெரியகுடதுன்னு நாங்க அவ ஸ்கூலுக்கு போனதுக்கப்புறம் உங்க கிட்ட வந்து இதை பத்தி பேசுறோம். நாங்க இதுவரை பார்க், பீச்னு எங்கும் சுத்தினது கிடையாது பா, காலேஜ்கான்டீன் ல கூட போய் உக்காந்து பேசினது கிடையாது வாரத்துல ரெண்டு நாள் எதாவது ஒரு கோவில்ல உக்காந்து ஒருமணி நேரம் பேசுவோம் பா எனக்கு தெரியும் பா நீங்களும் அம்மாவும் அண்ணனை நெனச்சு எவ்ளோ நாள் வேதனை பட்டிருபீங்க. அதே வேதனையை உங்களுக்கு நான் குடுக்கமாட்டேன் பா. எனக்கு campus interview ல வேலை கிடைச்சிருக்கு அது உங்கள்ளுக்கு தெரியும் அவருக்கும் தன் கிடைச்சிருக்கு..
இன்னும் ரெண்டு மாசத்துல கோர்ஸ் முடிஞ்சிடும் அதனால் தன் இப்ப உங்கக்கிடா சொல்லலாம்னு முடிவெடுத்து சொல்றோம் பா. நீங்களும் அம்மாவும் பேசி ஒரு நல்ல முடிவா சொல்லுங்கப்பா.நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவு எடுகிறீங்கலோ அதை நாங்க ஏத்துகிறோம்.இவர் வீட்ல பேசிட்டோம் அவங்க உங்களுக்கு ஓகேந அவங்களுக்கும் ஓகே நு சொல்லிருகாங்க"... நாங்க காலேஜ் கிளம்புறோம் பா கிளம்புறோம் மா. பாஸ்கர்ராஜ் "சார் கிளம்பறோம் சார் அம்மா வரேன் மா. " என்று சொல்லிவிட்டு இருவரும் சென்றுவிட்டார்கள்.. சுந்தரம் மனதில் இருந்த பாரம் இறங்கி மனம் பூ போல லேசானது. நம்பிக்கை என்ற வார்த்தைக்கு இன்று தான் தனக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாக தன் மகள் இருந்திருக்கிறாள் என்று பெருமிதம் கொண்டார்.
பின் குறிப்பு:
"j.பாஸ்கர்ராஜ் loves k.பூர்ணிமா" என்று பஸ்சில், இவர்களுக்கு வேண்டாதவர்கள்
எழுதிவிட்டனர்...

Thursday, November 5, 2009
உன் உயிர் உனக்கு சொந்தமா ?
ராமன் தனக்கென சொந்தமாக ஒரு செய்தித்தாள் நிறுவனத்தை நடத்தி
வந்தான். நேர்மையாகவும், உணமையான சம்பவங்களும், எந்த ஒரு
அரசியல் கட்சியும் சாராமல் உள்ளது உள்ளபடியே ஆச்சு பிசகாமல்
செய்திகளை சொல்லும் ஒரே நாளிதழாய் "அசோகா மித்திரன்" விளங்கியது.
அதனலயே பல அரசியயல் கட்சிகளின் எதிர்ப்புக்கு ஆளானான் ராமன்...
சமுக அக்கறை கொண்டவர்கள் மத்தியில் இவனுடைய
செய்திகளுக்கு பெரும் மதிப்பு உண்டு. அதுவே இவனை எதற்கும் பயப்படாமல் பல உண்மை செய்திகளை சொல்ல ஒரு உந்துதலாய் இருந்தது...
அமைச்சர் எழிலரசன் ஒரு தனி மனித அரசாங்கமே நடத்தி வந்தான் ..
மகளின் நலனை பார்த்தனே தவிர மக்களின் நலனுக்கு 10 பைசாவுக்கு
உபயோகமற்றவனாய் அரசியல் நடத்தி வந்தான். இவனை பற்றிய செய்திகளே அசோக மித்ரனில் பிரசித்தி பெற்றவையாய் விளங்கின.
இந்த முறை எளிரசனை பற்றி அசோகா மித்ரனில் வந்த செய்தி அவனது அரசியல் அஷ்திவாரதுக்கே பேர் இடியாக இருந்தது. அதனால் அவனது எடுபிடிகள் எப்படியாவது ராமனை ஒழித்து கட்ட வேண்டும் என்ற முடிவோடு கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள், அதிலும் எளிலரசனின் பாத்திரத்திற்கு உகந்தவனான மாரி , ராமனை கொல்ல அவனை தேடி புறபட்டான். ராமனின் வீட்டை நோக்கி தனது புல்லெட்ஐ செலுத்தினான். ராமனின் வீடு இருக்கும் தெருவை அடைந்தான். ராமனின் வருகைக்காக காத்திருந்தான் மாரி. மணி இப்போது 12:45, வாடிக்கையாக 1:00 மணிக்கெல்லாம் ராமன் தனது வீட்டுக்கு மதிய உணவுக்காக வருவதுண்டு, தனிக்கட்டை என்பதால் ஒரு பாட்டியை சமையளுக்காக வைத்துள்ளான். மதியம் உணவு உண்டு விட்டு அரை மணி நேரம் ஓய்வு எடுப்பது அவனது வழக்கம். ராமன் வந்து கொண்டிருப்பதை பார்த்தான் மாரி, ராமன் அவனது தெருவை அடைந்தவுடன் அவன் பின்னால் சென்ற மாரி அவனது தலையில் ஓங்கி அடித்தான், இதை சற்றும் எதிர்பாராத ராமன் சற்றே நிலை தடுமாறினான்.மாரி : "ஏன்டா நாயே பேணவும் பத்திரிக்கையும் இருந்துட்ட நீ என்ன வேணும்னாலும் எழுதுவியா ?. நீ இனிமே எப்படி எழுத போறேனு பார்க்கிறேன்" என்று அவனை அடித்து நைய புடைத்தான் , ராமனும் தன்னால் முடிந்த மட்டும் எதிர்த்து சண்டையிட்டு ஈடு கொடுக்க முடியாமல் திணறினான்.
மக்கள் கூட்டம் கூடிவிட்டதே தவிர ஒருவராலும் தடுக்க முடியவில்லை... ராமன் நிலைகுலைந்து போனான். கூட்டத்தில இருந்த ரமனின் சமையல்கார பாட்டி "அட படு பாவி இப்படி போட்டு அடிக்கிறியே நீ நல்ல இறுப்பியா உன்னக்கெல்லாம் நல்ல சாவே வராது, உன்னை கொள்ளுரதுகுனு எவனாவது பொறந்து வருவான்" அதற்கு மாரி "யே கெழவி நீ என்ன இந்த நாய்க்கு வக்காலத்து வங்குற ஓடிடு இல்லேன்னா உன்னையும் போட்டு தள்ளிடுவேன் " என்று சொல்லிகொண்டே சிரித்த படி "என்னை எவனாலும் ஒன்னும் பண்ண முடியாது" என்று தான் வைத்திருந்த கத்தியால் ராமனின் வயிற்றில் குத்தினான்.
தன் தலைவனுகேன்று இருந்த ஒரே எதிரியை அழித்து விட்டோம் என்ற இறுமாப்புடன் தன் வண்டியை மறந்தவாறு நடக்கலானான்... சாலையை கடக்க முற்படும்போது எதோ மரத்திலிருந்து சத்தம் கேட்டது இரண்டு அணில்கள் சண்டையிட்டு கொண்டிருந்ததை பார்த்தான். ஒரு பெரிய அணில் சிறிய அணிலை துரத்தியவாறு சண்டையிட்டு கொண்டிருந்தது, சிறிய அணில் தன்னால் முடித்த வரை ஈடு கொடுத்து போராடியது முடியவில்லை சோர்ந்து மரத்திலிருந்து கிழே விழுந்தது.மாரி அதை பார்த்து எக்காளமாய் சிரித்தான் . பெரிய அணில் சந்தோஷமாக நகர முற்பட்டபோது மேலிருந்து பறந்து வந்த கழுகு தன கால்களால் பெரிய அணிலை தூக்கிக்கொண்டு போனது. "படார்" என சத்தம் கேட்டது எதிரே வந்த கார் மாரியின் மீது மோதியது. மாரி அந்த இடத்திலேயே துடி துடிக்க ரத்த வெள்ளத்தில் இறந்து போனான்... "என்னை எவனாலும் ஒன்னும் பண்ண முடியாது"........ ஆம் இறந்த உன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது ....

Subscribe to:
Posts (Atom)