ராமன் தனக்கென சொந்தமாக ஒரு செய்தித்தாள் நிறுவனத்தை நடத்தி
வந்தான். நேர்மையாகவும், உணமையான சம்பவங்களும், எந்த ஒரு
அரசியல் கட்சியும் சாராமல் உள்ளது உள்ளபடியே ஆச்சு பிசகாமல்
செய்திகளை சொல்லும் ஒரே நாளிதழாய் "அசோகா மித்திரன்" விளங்கியது.
அதனலயே பல அரசியயல் கட்சிகளின் எதிர்ப்புக்கு ஆளானான் ராமன்...
சமுக அக்கறை கொண்டவர்கள் மத்தியில் இவனுடைய
செய்திகளுக்கு பெரும் மதிப்பு உண்டு. அதுவே இவனை எதற்கும் பயப்படாமல் பல உண்மை செய்திகளை சொல்ல ஒரு உந்துதலாய் இருந்தது...
அமைச்சர் எழிலரசன் ஒரு தனி மனித அரசாங்கமே நடத்தி வந்தான் ..
மகளின் நலனை பார்த்தனே தவிர மக்களின் நலனுக்கு 10 பைசாவுக்கு
உபயோகமற்றவனாய் அரசியல் நடத்தி வந்தான். இவனை பற்றிய செய்திகளே அசோக மித்ரனில் பிரசித்தி பெற்றவையாய் விளங்கின.
இந்த முறை எளிரசனை பற்றி அசோகா மித்ரனில் வந்த செய்தி அவனது அரசியல் அஷ்திவாரதுக்கே பேர் இடியாக இருந்தது. அதனால் அவனது எடுபிடிகள் எப்படியாவது ராமனை ஒழித்து கட்ட வேண்டும் என்ற முடிவோடு கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள், அதிலும் எளிலரசனின் பாத்திரத்திற்கு உகந்தவனான மாரி , ராமனை கொல்ல அவனை தேடி புறபட்டான். ராமனின் வீட்டை நோக்கி தனது புல்லெட்ஐ செலுத்தினான். ராமனின் வீடு இருக்கும் தெருவை அடைந்தான். ராமனின் வருகைக்காக காத்திருந்தான் மாரி. மணி இப்போது 12:45, வாடிக்கையாக 1:00 மணிக்கெல்லாம் ராமன் தனது வீட்டுக்கு மதிய உணவுக்காக வருவதுண்டு, தனிக்கட்டை என்பதால் ஒரு பாட்டியை சமையளுக்காக வைத்துள்ளான். மதியம் உணவு உண்டு விட்டு அரை மணி நேரம் ஓய்வு எடுப்பது அவனது வழக்கம். ராமன் வந்து கொண்டிருப்பதை பார்த்தான் மாரி, ராமன் அவனது தெருவை அடைந்தவுடன் அவன் பின்னால் சென்ற மாரி அவனது தலையில் ஓங்கி அடித்தான், இதை சற்றும் எதிர்பாராத ராமன் சற்றே நிலை தடுமாறினான்.மாரி : "ஏன்டா நாயே பேணவும் பத்திரிக்கையும் இருந்துட்ட நீ என்ன வேணும்னாலும் எழுதுவியா ?. நீ இனிமே எப்படி எழுத போறேனு பார்க்கிறேன்" என்று அவனை அடித்து நைய புடைத்தான் , ராமனும் தன்னால் முடிந்த மட்டும் எதிர்த்து சண்டையிட்டு ஈடு கொடுக்க முடியாமல் திணறினான்.
மக்கள் கூட்டம் கூடிவிட்டதே தவிர ஒருவராலும் தடுக்க முடியவில்லை... ராமன் நிலைகுலைந்து போனான். கூட்டத்தில இருந்த ரமனின் சமையல்கார பாட்டி "அட படு பாவி இப்படி போட்டு அடிக்கிறியே நீ நல்ல இறுப்பியா உன்னக்கெல்லாம் நல்ல சாவே வராது, உன்னை கொள்ளுரதுகுனு எவனாவது பொறந்து வருவான்" அதற்கு மாரி "யே கெழவி நீ என்ன இந்த நாய்க்கு வக்காலத்து வங்குற ஓடிடு இல்லேன்னா உன்னையும் போட்டு தள்ளிடுவேன் " என்று சொல்லிகொண்டே சிரித்த படி "என்னை எவனாலும் ஒன்னும் பண்ண முடியாது" என்று தான் வைத்திருந்த கத்தியால் ராமனின் வயிற்றில் குத்தினான்.
தன் தலைவனுகேன்று இருந்த ஒரே எதிரியை அழித்து விட்டோம் என்ற இறுமாப்புடன் தன் வண்டியை மறந்தவாறு நடக்கலானான்... சாலையை கடக்க முற்படும்போது எதோ மரத்திலிருந்து சத்தம் கேட்டது இரண்டு அணில்கள் சண்டையிட்டு கொண்டிருந்ததை பார்த்தான். ஒரு பெரிய அணில் சிறிய அணிலை துரத்தியவாறு சண்டையிட்டு கொண்டிருந்தது, சிறிய அணில் தன்னால் முடித்த வரை ஈடு கொடுத்து போராடியது முடியவில்லை சோர்ந்து மரத்திலிருந்து கிழே விழுந்தது.மாரி அதை பார்த்து எக்காளமாய் சிரித்தான் . பெரிய அணில் சந்தோஷமாக நகர முற்பட்டபோது மேலிருந்து பறந்து வந்த கழுகு தன கால்களால் பெரிய அணிலை தூக்கிக்கொண்டு போனது. "படார்" என சத்தம் கேட்டது எதிரே வந்த கார் மாரியின் மீது மோதியது. மாரி அந்த இடத்திலேயே துடி துடிக்க ரத்த வெள்ளத்தில் இறந்து போனான்... "என்னை எவனாலும் ஒன்னும் பண்ண முடியாது"........ ஆம் இறந்த உன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது ....
உன் உயிர் உனக்கு சொந்தமா ?

2 comments:
அருமையான முடிவு. நல்லக் கதைக் கரு.......
நன்றி புலிகேசி
Post a Comment