Thursday, December 31, 2009

கவிதை.....

காதல் கடிதங்கள்...


பலமுறை படித்திருந்தாலும் திரும்ப திரும்ப படிக்கத்தூண்டும் அக்க்ஷய புத்தகம்... காதல் கடிதங்கள்...



காதல் தோல்வி....

மழைக்கால மேகமாய் நீ குடை கொண்டு தருவாயா நீ ...
உன் மழைகாலம் பொய்யானால் என் இலைகள் தான் உதிர்ந்தோடுமே...
வானில் பறக்கும் கிளிகள் என் நெஞ்சில் உனது இதழ் ஈரத்துளிகள் ...
சுவாசிக்க மட்டும் தெரிந்த என்னை புகைக்க வைக்காதே...
உன் நினைவில் கொன்று இன்று என்னை புதைத்து விடாதே .....
காதல் தோல்வி....

தாய்...

பத்து மாதங்கள் வரை நீ தூங்கிவிட கூடாது என்று
விழித்துக்கொண்டே வயிற்றை தடவிக்கொண்டிருப்பவள்...
பத்து மாதங்களுக்குப்பின் நீ தூங்கவேண்டும் என்று
விழித்துக்கொண்டே உன்னை தடவிக்கொண்டிருப்பவள்....
நீ தடுக்கி விழுந்தாலும் தட்டி விட்டாலும்
உன்னை என்றுமே தடவி கொண்டிருப்பவள் .. தாய்...

Monday, December 28, 2009

கவிதை.....

பனி....


காதலன்(சூரியன்) முகம் கண்டதும்
வெட்கத்தில் உருகும் தண்ணீர் பெண் .... பனி...


புயல்...

காதலில் தோல்வியடைந்து கடலில் தற்கொலை செய்துகொண்டவர்கள்
கரையில் அமர்ந்திருக்கும் காதல் ஜோடிகளை பார்த்து விடும் பெருமூச்சு .... புயல்...

மழை....


ஏழைகள் கண்ணீர் விடாமல் இருக்க ...
கடவுள் விடும் ஆனந்தக் கண்ணீர்.... மழை...


முத்தம் ....


கத்தியின்றி ரத்தமின்றி இரு இதழ்களுக்குள் நடக்கும் இனிமையான யுத்தம்.... முத்தம்


இதயமும் விழியும் ...

நீ (விழி) தூங்கினாலும் விழித்திருந்தாலும் நான் (இதயம்) தூங்குவதில்லை ....
நான் தூங்கினால் நீ என்றுமே விழிப்பதற்கில்லை ...


தூக்கம் ...


இரு விழி திறைகளுக்குள் நடக்கும் முதலிரவு .... தூக்கம்...




என் காதலி ....

வாழை தண்டம் அவள் மேனி...
அவள் நடையிலே ஒரு கலைவாணி ...
என்னை கண்டதும் அவள் நாணி ...
என் நெஞ்சில் அறைந்துவிட்டாள் ஒரு ஆணி...
என்னை அவள் இன்று ஆக்கி விட்டால் ஒரு ஞானி ....
என் காதலி ....

இதயத்துடிப்பு ...

இதயம் துடிப்பது 72 முறை...
காதலிக்கும் பொழுது 114 முறை...
மாரடைப்பு வரும் பொழுதோ 30 முறை...
காதல் தோற்கும் பொழுதும் 30 முறை ...
இதனால் தான் என்னவோ காதலை இதயத்துடன் இணைதிருக்கிரார்களோ ...?

விடியல்...


இருளின் பிரசவம்... விடியல்...