Monday, December 28, 2009

கவிதை.....

பனி....


காதலன்(சூரியன்) முகம் கண்டதும்
வெட்கத்தில் உருகும் தண்ணீர் பெண் .... பனி...


புயல்...

காதலில் தோல்வியடைந்து கடலில் தற்கொலை செய்துகொண்டவர்கள்
கரையில் அமர்ந்திருக்கும் காதல் ஜோடிகளை பார்த்து விடும் பெருமூச்சு .... புயல்...

மழை....


ஏழைகள் கண்ணீர் விடாமல் இருக்க ...
கடவுள் விடும் ஆனந்தக் கண்ணீர்.... மழை...


முத்தம் ....


கத்தியின்றி ரத்தமின்றி இரு இதழ்களுக்குள் நடக்கும் இனிமையான யுத்தம்.... முத்தம்


இதயமும் விழியும் ...

நீ (விழி) தூங்கினாலும் விழித்திருந்தாலும் நான் (இதயம்) தூங்குவதில்லை ....
நான் தூங்கினால் நீ என்றுமே விழிப்பதற்கில்லை ...


தூக்கம் ...


இரு விழி திறைகளுக்குள் நடக்கும் முதலிரவு .... தூக்கம்...




என் காதலி ....

வாழை தண்டம் அவள் மேனி...
அவள் நடையிலே ஒரு கலைவாணி ...
என்னை கண்டதும் அவள் நாணி ...
என் நெஞ்சில் அறைந்துவிட்டாள் ஒரு ஆணி...
என்னை அவள் இன்று ஆக்கி விட்டால் ஒரு ஞானி ....
என் காதலி ....

இதயத்துடிப்பு ...

இதயம் துடிப்பது 72 முறை...
காதலிக்கும் பொழுது 114 முறை...
மாரடைப்பு வரும் பொழுதோ 30 முறை...
காதல் தோற்கும் பொழுதும் 30 முறை ...
இதனால் தான் என்னவோ காதலை இதயத்துடன் இணைதிருக்கிரார்களோ ...?

விடியல்...


இருளின் பிரசவம்... விடியல்...

11 comments:

Arunkumar Chandrasekaran said...

பனி எனக்கு பிடித்தது.உன் தமிழ்ப்பணி மேலும் சிறக்க என் வாழ்த்துகள்.

rajeshkannan said...

நன்றி அருண்

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றாய் உள்ளது நண்பா ...................................................
புயல் கவிதை அருமை ......
தொடருங்கள்

பனி கவிதையில் சற்றே ஆணாதிக்கம் உள்ளது ....ஏன் காதலன் பனியாய் இருக்கலாமே .........
கடவுள் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது ......

புயல் கவிதை அபாரம்...........ஆனால் ஏன் இதில் மழை கவிதையை இணைத்தீர்கள் ,மற்ற அனைத்தும் காதலை சொல்கிறது அது
தனியாக இருக்கிறது .....

rajeshkannan said...

நன்றி கார்த்தி
சோகமும் சுகமும் கலந்தது வாழ்க்கை..

பொதுவாகவே ஆண்களை மிக கம்பிரமகவும்
பெண்களை மென்மையாகவும் சொல்லும் வழக்கம் தானே... நண்பா ...

நானும் நாத்திகனே இருப்பினும் நல்லது என்றாலும் கெட்டது என்றாலும்...
மக்கள் இல்லாத கடவுளை தானே சொல்கிறார்கள்

நீங்க சொன்னவாறு அது வேறு பிரிவில் வரவேண்டிய கவிதையே....
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.....

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்...

rajeshkannan said...

மிகவும் நன்றி கமலேஷ்

Harish said...

machi....naa thamizh'la roomba weak'ku.....ur hique poems are too good......i hadn't seen such a creations during college days from u(or i am unaware of it).....kanna kuela ippaaadi oru hique kavingana....nee comedy paanuvaennnu theriyum aaana ipppadi naala peom yaeluthu vaennu ippooothaaan theriyum.......grt machi grt.....
keep posting more and more poems....
machi u have some similarities with NS, parthiban, vivek.....keep posting more and more peoms, and don't forget to ping me on updation of ur blog.......
its my pleasure to read it.......thank u machi......

rajeshkannan said...

Harish... Thanks for the comment.I'll surely update you....

vijaya said...

"ஏழைகள் கண்ணீர் விடாமல் இருக்க ...
கடவுள் விடும் ஆனந்தக் கண்ணீர்.... மழை.."

"இனிமையான அர்த்தமுள்ள வரிகள்"

வாழ்த்துகள்.

rajeshkannan said...

Thanks Vijaya

Anonymous said...

hey rajesh.. its looks good.. a very good start.. good to see... All the best..

- Manikandan Arumugam