Monday, April 5, 2010
நான் - கேபிள் அண்ணன் - லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்
நான் ஒன்றும் பெரிதாய் புத்தகங்களையோ பதிவுகளையோ விரும்பி படிப்பவன் அல்ல. ஆனால் எழுதுவதில் மிகவும் ஆர்வமுண்டு. படிப்பதை விட எழுதுவதே அதிகம் விரும்புபவன் நான். அப்படியிருக்க "வெண்ணிற இரவுகள் " கார்த்திக்கின்(X -Colleague) பதிவுகளை மட்டுமே விரும்பி படித்து வந்தேன்.
எனக்கு கேபிள் அண்ணனை பற்றி அறிமுகம் இல்லாத நாட்களில் அவரை (ப்ளாக் லிங்க்) எனக்கு அறிமுகப்படுத்தியவர் கார்த்திக். நான் இப்போது பணிபுரியும் அலுவலகத்திலே இருவர் கேபிள் அண்ணனின் பதிவுகளை தினமும் படிக்கும் வாசகர்கள். நான் கேபிள் அண்ணனின் முதல் பதிவை படித்தவுடன் அவரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இவ்வளவு நாட்களாக இவருடைய பதிவுகளை படிக்காமல் மிஸ் செய்துவிட்டோமே என்று கூட நினைதேன்.
அவருடன் chat இல் அதிகமா பேச ஆரம்பிதேன். எந்த ஒரு ego இல்லாமல் அவ்வளவு எளிமையாகவும், பண்பாகவும் பேசகூடிய ஒரு பண்பாளர் அவர்.
அப்துல்லா- சிவா - டேனியல் கதையா படித்து விட்டு அவருடன் தொடர்பு கொண்டு இந்த கதையா ஒரு short film ஆக எடுத்தல் மிக அருமையை இருக்கும் என்று சொன்னேன் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் அதை ஏற்று கொண்டு அதற்க்கு என்ன செலவாகும் என்பதையும் தயாரிப்பாளர் இருந்தால் சொல்லுங்கள் என்றும் சொன்னார். மற்றவர்கள் கருத்துக்கு மரியாதை தருபவர்.
அவரை முதல் முறையாக அடையாரில் அவருடைய புத்தகத்தை வாங்குவதற்காக சந்தித்தேன். பார்பதற்க்கு மிக எளிமையாகவும் எளிதில் நெருங்கக்கூடிய சுபவமுமாய் இருந்தார். நாங்கள் இருவரும் அன்று மதிய உணவிற்காக அடையாரில் உள்ள "ரெயின் போறேஸ்ட்" க்கு சென்றோம். நாங்கள் 40 நிமிடம் உள்ளே நின்றவாறு காத்து கொண்டிருந்தோம். அப்போது கேபிள் அண்ணன் என்னை பற்றி எல்லாவற்றயும் கேட்டு கொண்டிருந்தார்.புதிதாக ஒருவருடன் பேசிகிறோம் என்ற எண்ணமே தோன்றாமல் பார்த்து பழகிய நண்பர் போல் அவரை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். போனில் அழைத்தாள் பிஸியாக இருந்தாலும் கூட போனை கட் செய்வதோ அல்லது "பிஸி அப்புறம் பேசுகிறேன்" என்றோ இதுவரை என்னிடம் அவர் சொன்னது இல்லை. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் போனில் நான்கு வார்த்தைகளாவது பேசிவிட்டுத்தான் வைப்பார்.
இது போன்ற நற்குணங்களும், தலைகனமற்ற அவருடைய பண்பும்தான் அவர் மென்மேலும் உயர்வதற்கான ஒரு கருவியை இருந்திருகிறது என்று சொல்லலாம்.அவருடைய எழுத்துகளின் மூலம் படிக்கும் நம்மை அந்த கதாப்பாத்திரமாகவே மாற்றக்கூடிய வல்லமை அவருடைய எழுத்துக்கு உண்டு. அவர் எழுத்து நடை படிப்பவர்களை காட்சி நடக்கும் களத்திற்கே கொண்டு செல்லும் மந்திர கொண்டதாய் உள்ளது.
லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும் விமர்சனம்
முத்தம்:
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் அந்த பழமொழிக்கு இந்த கதையே ஒரு சான்று.இந்த ஒரு கதையே அவரின் கதை தொகுப்புகளின் சிறப்பை காட்டிவிடுகிறது.மிகவும் பரபரப்பை, முடிவு என்ன என்று அறிய துண்டும் வகையில் இந்த கதையை கேபிள் அண்ணன் படைத்துள்ளார் அதுவும் அவரது பாணியில். ரமேஷின் கதாபத்திரத்தை மிகவும் அருமையாக சொல்லியிருகிறார் கிடைகும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் நல்ல எண்ணத்துடன் உதவி செய்யும் ரமேஷ் ஒரு வகையில் அவளை காதலிக்கிறான்....
லெமன் ட்ரீயும்..இரண்டு ஷாட் டக்கீலாவும்:
நாளை என்பது இல்லாத ஒன்று இன்று இந்த நொடி மட்டுமே நிரந்தரம் என்பதை சொல்லும் கதை.வாழ்கையை அனுபவிக்க வயது ஒன்றுமே பெரிய தடையே இல்லை வாழ்கையை எப்படி எடுத்துகொள்ளவேண்டும் என்பதை பற்றிய கதை.
கல்யாணம்:
வாழ்கையில் settle ஆவதற்காக கல்யாணத்தை தள்ளி போடும் இளைஞன். கல்யாண வயதைக் கடந்தும் கல்யாணமாகாமலிருக்கஅதனால் அவனுக்குள் ஏற்படும் மாற்றங்கள், நிகழ்வுகள் பற்றி கொஞ்சம் விரசம் கலந்து சொல்லப்பட்டிருந்தாலும்.மிகவும் அருமையாகத்தான் சொல்லியிருகிறார்.
ஆண்டாள்:
சிறுவயது காதல் என்பது ஒரு ஈர்ப்பு என்றாலும் கூட அது எல்லோருடைய மனசில் பசுமரத்து ஆணி போல் என்றுமே நிலைத்திருக்கும். அந்த உணர்வை அருமைய சொல்லியிருகிறார். இருந்தாலும் ஆண்டாள் அவனை உதாசீனபடுத்தி இருக்ககூடாது...
ஒரு காதல் கதை, இரண்டு கிளைமாக்ஸ்:
ஒரு அழகான காதல் கதை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கும் விதம் அருமை.அது சரி கதையில் தன ரெண்டு கிளைமாக்ஸ் இருக்கமுடியும்.. லைப்ல ?
தரிசனம்:
ஒருவனின் மனைவி சாமியாரின் மேல் கொண்ட அதீத பக்தி அவரிடம் போனால் குறை நீங்கும் என்று கணவனை வற்புறுத்தி அவரிடம் அழைத்து செல்கிறாள்.இன்றைய காலகட்டத்துக்கு தேவையான ஒரு கதையே.
போஸ்டர்:
ஒரு படத்திற்கு போஸ்டர் அடிப்பார்கள், எதோ விளம்பரத்திற்காக போஸ்டர் அடிப்பார்கள்.அனால் கேபிள் அண்ணன் ஒருவரால் மட்டுமே போஸ்டரை வைத்து கதை(படம்) சொல்ல முடியும். மிகவும் அருமையாக சொல்லியிருகிறீர்கள்...
துரை.நான்.ரமேஷ் சார்:
காதலித்த ஒரே பாவத்திற்காக ஒரு பெண் எப்படி எல்லாம் சீரழிகிறாள் தனது காதலனுக்க காதலுக்காக என்பதை தெள்ள தெளிவாக சொல்லியிருகிறார். முடிவு சற்று பயங்கரமாக இருந்தாலும் அது சரியான முடிவே.. சினிமா பின்னணியை வைத்து பின்னப்பட்ட ஒரு கதை ...
என்னை பிடிக்கலையா:
ஒரு பெண் தன காதலனிடம் என்ன எதிபர்கிறாள் அதே காதலன் கணவனானவுடன் என்ன எதிர்பார்கிறாள் என்பதை சொல்லியிருகிறார். அப்படி கணவனிடம் கிடைக்காத ஒன்று வேறொருவரிடம் கிடைக்கும் பொழுது பெண் எப்படி மாறுகிறாள்.அவள் மன உணர்வு எப்படி பட்டது .காமத்தையும் தண்டி அவள் என்ன எதிர்பார்கிறாள் என்பதை பற்றிய கதை இது..
காமம் கொல்:
சாமியார்கள் எப்படி என்பதை கடைசி ஒரு வரியில் நச்சென சொல்லியிருக்கிறார் கேபிள் அண்ணன்.காமத்திற்கு வடிகாலாய் அவர் என்ன செய்கிறார் என்பதை கதையா படித்தால் உங்களுகே புரியும்
ராமி...சம்பத்...துப்பாக்கி:
கதையின் ஆரம்பமே திடும் திடும் இசையுடன் :-) தன்னை விரும்பி உறவு வைத்துகொண்டவன் தான் யார் என்று தெரிந்தவுடன் அவன் மாறும் மனநிலையை ஏற்றுக்கொள்ளது நடக்கும் சுவாரசியமான கதை....
மாம்பழ வாசனை:
காதல் எப்படி எல்லாம் ஒருவனை மாற்றுகிறது என்ன அவனை ஈர்க்கிறது என்பதை பற்றிய கதை ...
நண்டு:
ஒரு வெள்ளந்தி மனைவியின் மனநிலை தன் கணவனுக்கு கான்செர் எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் பதைபதைக்கும் குழந்தையாய்... மிகவும் அருமையான உருக்கமான கதை.
இவரின் கதைகள் மனஉணர்வை விவரிக்க கூடியவையாய் காட்சிகளை கண்முன் கொண்டுவரும் திறன் கொண்டவையாய் இருப்பமையால்.. நான் கேபிள் அண்ணனிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன்.. அது என்னவென்றால் முடிந்தவரை அவருடைய அணைத்து கதைகளை ஒரு short storyஅக எடுக்கவேண்டும் என்பதே...
இதன் கோரிக்கை நியாயமானது என்று கருதும் அனைவரும் அவரிடம் இந்த கோரிக்கையை வைக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
மிக்க நன்றி ராஜேஷ்..
கேபிள் சங்கர்
Thanks na
முதல் முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வந்துள்ளேன்.....
ஏன் தான் வந்தோமென்று கண் கலங்கினேன்.... இதற்க்கு நீங்கள் எந்த கதையையும் படித்ததில்லை என்ன நினைக்கிறேன்... தயவு செய்து பல புத்தகங்களை படித்து விட்டு பதிவேளுதுமாறு கேட்கிறேன்... இந்த பின்னூட்டம் உங்களை கலைக்க வேண்டும் என்று எழுதவில்லை...
கேபிளோட எல்லா பதிவும் சினிமா, வேறன்ன இருக்கிறது...... அவரை போய் நீங்கள் நல்ல பதிவாளர் என சொல்கிரீர்கள்.... நாம் எழுதுகிற, எடுக்கிற படைப்பு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்... ஏனெனில் ஊடகங்கள் மக்களை திசை திருப்ப கூடிய மிக பெரிய கருவி...அதை சரியாக பயன்பெடுத்த வேண்டும்... அவனே சிறந்த படைப்பாளன், பதிவாளன்.......
தயவுசெய்து இந்த மாதிரி மொக்கை புத்தகங்கள் , பதிவெல்லாம் படித்துவிட்டு பெருமையாக எழுதாதீர்கள்.....
முதல் முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வந்துள்ளேன்.....
ஏன் தான் வந்தோமென்று கண் கலங்கினேன்.... இதற்க்கு நீங்கள் எந்த கதையையும் படித்ததில்லை என்ன நினைக்கிறேன்... தயவு செய்து பல புத்தகங்களை படித்து விட்டு பதிவேளுதுமாறு கேட்கிறேன்... இந்த பின்னூட்டம் உங்களை கலைக்க வேண்டும் என்று எழுதவில்லை...
கேபிளோட எல்லா பதிவும் சினிமா, வேறன்ன இருக்கிறது...... அவரை போய் நீங்கள் நல்ல பதிவாளர் என சொல்கிரீர்கள்.... நாம் எழுதுகிற, எடுக்கிற படைப்பு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்... ஏனெனில் ஊடகங்கள் மக்களை திசை திருப்ப கூடிய மிக பெரிய கருவி...அதை சரியாக பயன்பெடுத்த வேண்டும்... அவனே சிறந்த படைப்பாளன், பதிவாளன்.......
தயவுசெய்து இந்த மாதிரி மொக்கை புத்தகங்கள் , பதிவெல்லாம் படித்துவிட்டு பெருமையாக எழுதாதீர்கள்.....
நல்ல பதிவு. நன்றி.
உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி punitha.மிக்க நன்றி
ஹலோ Anonymous நீங்க யாருன்னு தெரியகூடதுன்றதுகாக இப்படி
அநோன்ய்மௌஸ் ல வந்திருக்கீங்க. அதாவது சொல்ல வர விசயத்தை
எல்லாரையும் ஈர்க்கும் வகையில் சொல்வது என்பது மிக கடினம்
அதை கேபிள் அண்ணன் செய்றார். அதற்கான பதிவு தான் இது....
நீங்க உண்மையிலுமே நேர்மையான ஆள இருந்திருந்த anonymous அஹ
வந்திருக்கமாடீங்க
கேபிள் என் இனிய நண்பர். இன்னும் நிறைய சாதிக்க போகிறார். வாழ்த்துகள் கேபிள்.
நன்றி ராஜேஷ்.
ஏம்ப்பா உன்ன என்ன சொல்லிட்டீனு இப்புடி கோசசிக்குற....
பெயர் முக்கியமில்லப்பா, கருத்துதான் முக்கியம்........ அதை
யாருனாலும் சொல்லாலாம்.... பெயரை குறிப்பிட்டால் இவன் இந்த மதம், சாதி பிரிவினை வந்துவிடும்..... நான் பிரிவினை வாதி அல்ல, உங்களில் இருந்து மாறுபட்டவன்..... தயவு செய்து தெளிவு பெற்று பதிவெழுத வேண்டுகிறேன்...
//எல்லாரையும் ஈர்க்கும் வகையில் சொல்வது என்பது மிக கடினம்
அதை கேபிள் அண்ணன் செய்றார்.//
உங்கள் அண்ணன் என்னை ஈர்க்கவில்லையே....... எல்லோரையும் ஈர்க்கிறார் என்று உங்களுக்குள்ளே ஒரு மாயே தான்........
உலக இலக்கியங்களை படியுங்கள்.... மக்களுக்கு கருத்து சொல்கிற, எழுசியூட்டகூடிய இலக்கியமே இலக்கியமாகும்... அந்த அரை வேக்காடுக்கு, நீங்கள் ஒரு கால் வேக்காடா.....? போங்கள் போய் உலக இலக்கியங்களை படியுங்கள்....!
'
நூறு பக்கத்துல எதையாவது கிறுக்கினா அது இலக்கியமா....?
vanakam nanba......
Post a Comment