Thursday, April 8, 2010

ஏன் இந்த நிலை?


இன்றைய உலகம் - என், எனக்கு என்ற நிலையிலையே ஓடிக்கொண்டிருகிறது. கனவில் கூட அடுத்தவர் நலன் பற்றிய அக்கறை சிறிதும் எட்டிப்பார்பதில்லை. அடுத்தவர் துயர் துடைக்க எத்தனையோ உதவிகளையும், கொடைகளையும் செய்த வள்ளவர்கள் வாழ்த்த நாடு என இனிவரும் சந்ததியினரிடம் வரலாற்று சான்றுகளை காட்டினால் கூட "இவை அனைத்தும் உண்மையா?" என்று கேட்கும் நிலை வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. ஏன் இந்த நிலை எவரை பற்றியும் அக்கறை அற்ற நிலை.மனித குலத்தின் மகிமைக்கே பங்கம் விளைவிக்கும் நிலை.

பணம், பகட்டு எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கும் வசதி இது போன்றவைகள் மனிதனின் மனநிலையை குறுக்கிவிடுகிறது.தன்னிலை விட்டு சிந்திக்கும் திறன் குறைந்துவிடுகிறது.

ஒரு டி கடையில் டி குடிக்க குறைந்தது 3 - 5 ருபாய் செலவாகும்.ஆனால் இவர்களோ பெரிய ஹோடல்களயே அதிகம் விரும்பு போவார்கள்.அதுவும் AC அறையிலே ஒரு டியின் விலை 50 ருபாய் அதுவும் ஒரு சில பெரிய ஹோல்களில் பால் தனியாக, சர்க்கரை தனியாக
தந்துவிடுவார்கள் நாமாகவே தான் தயாரித்து கொள்ளவேண்டும்.அதற்க்கு டிப்ஸ் ஆகா 10 - 50 ருபாய் வரை கொடுப்பார்கள். டி என்பது சூடாக குடிக்க வேண்டிய ஒரு பானம் அதற்கு எதற்கு AC அறை. சுவை நன்றாக இருந்தால் கூட பரவில்லை அது மட்டமாகவே சில இடங்களில் இருக்கும். ஆனால் சில ரோட்டோர கடைகளில் கிடைக்கும் டி சுவை மிகுந்ததாய் இருக்கும்.அந்த 5 ருபாய் டிக்கு ஒரு இரண்டு ருபாய் சேர்த்து கொடுத்து பாருங்கள் உங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் அந்த டி யின் சுவையும் இரண்டு மடங்காய் பெருகி இருக்கும். ஒரு பிச்சைக்காரர் பிச்சை கேட்டால் கூட ஒரு ருபாய் கொடுக்காத இவர்கள் டிப்ஸ் ஆக 50 ருபாய் வரை கொடுப்பது ஏன் - இது தான் நாகரீகமா?.
நீங்கள் டிப்ஸ் ஆக 50 ருபாய் வரை கொடுக்கிறீர்களே அதில் ஒரு 10 ரூபாயை ஒரு பிச்சைக்காரருக்கு கொடுத்தல் ஒரு வேலை பசியாருவாரல்லவா? சிந்தியுங்கள் ....

பொதுவாக பெண்கள், வீடு தேடி வரும் காய்கரி கார பெண்ணிடம் 5 ருபாய் கிரைக்காக 1 ருபாய் குறைக்க சொல்லி அரை மணி நேரம் சண்டை இடுவார்கள். ஆனால் அதே பெண்கள் reliance அல்லது more சூப்பர்மார்க்கெட் சென்றார்கள் என்றால் அதே 5 ருபாய் கீரையை 10 ருபாய் கொடுத்து வாங்குவார்கள் இவர்களை என்னெவென்று சொல்வது.நம் வீடு தேடி வரும் காய்கறிக்கார பெண்ணோ/ஆணோ/ முதியவரோ/மூதாட்டியோ யாராக இருந்தாலும் இந்த வேகாத வெயிலிலே நமக்காக வருபவர்களுக்கு பேரம் பேசாமல் அந்த காய்கறிக்கான காசை கொடுப்பது தான் மனிதாபீமானம்..

எதோ ஒரு சூழ்நிலையில் நாம் இரவு வேலைகளில் பஸ்சிர்க்காக காத்துக்கொண்டிருபோம், பஸ் வரத்தும் குறைந்திருக்கும் நேரமாயிருக்கும் அது. அந்த வேலையில் யாராவது ஒருவரிடம் lift என்று கேட்டால் 100 இல் 99 பேர் வண்டியை சிறுது கூட ஸ்லொவ் செய்யாமல் போய்விடுவார்கள். அந்த ஒருவர் மட்டுமே நிற்பதற்கான வாய்ப்புகள் உண்டு அவரும் நாம் செல்லும் இடத்திற்கு செல்லாமல் அதற்க்கு முன்னதாகவே இருக்கும் இடத்திற்கு செல்பவராக இருப்பார்.lift என கேட்பவரை பார்த்தால் நல்லவரா இல்லை கெட்டவரா என்பது கூடவா தெரியாது.அது சரி மனிதனின் மனதையே புரிந்துகொள்ள தெரியாதவர்களுக்குமுகத்தை பார்த்து எப்படி கண்டுபிடிக்க போகிறார்கள். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பதை தெரியாதவர்கள். எனது பெருமைக்காக நான் இதை சொல்ல வில்லை, பள்ளிசிறுவர்கள் , குடிகாரர்களை தவிர என்னிடம் lift என்று யார் கேட்டாலும் கொடுத்துவிடுவேன்.உதவுவதால் என்றைக்குமே உங்களுக்கு எந்த கெடுதலும் வந்துவிடபோவதில்லை முன்னேச்சரிக்கை அவசியமே.ஆனால் உதவுங்கள்.

ஒரு இந்தியன் வெளிநாட்டுக்கு செல்கிறான் என்றால் அங்கே உள்ள சட்டதிட்டங்களை உமியளவும் பிசகாமல் அப்படியே கடைபிடிப்பான்.அதே இந்தியன் நம் நாடு சட்டதிட்டங்களை சிறிதளவும் மதிப்பதில்லை."இந்த்யவுல பப்ளிக்ல கிஸ் அடிக்க முடியாது பாரின்ல பப்ளிக்ல பிஸ் அடிக்கமுடியாது" என்பது நகைசுவைகாக சொல்லப்பட்டிருந்தாலும்
அதில் ஒவ்வொரு இந்தியனும் வேட்க்கி தலைகுனிய வேண்டிய உண்மை ஒளிந்துள்ளது என்பது யாருக்கும் தெரியாமல் இல்லை.


இது போன்ற நிலை நீடித்தால் எது நாகரீகம் ... எது நல்லவை.. எது மனிதாபிமானம் என்ற கேள்விகளுக்கு புதையுண்ட டினோசர்களை ஆராய்வதை போன்ற ஆராய்சிகள் மேற்கொள்ள வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை!!!!!!!

4 comments:

பாலா said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
அருமையான பதிவு.

வாழ்த்துக்கள் நண்பா..

சுரைஜ் அஹமது said...

அருமையான கருத்து. ஆழமான சிந்தனை. ஒவ்வொருவரும் தன்னை நிலை கண்ணாடி முன் நிறுத்தி கேட்க வேண்டிய நியாயமான ஒரு சிந்தனை.....

rajeshkannan said...

நன்றி பாலா

rajeshkannan said...

நன்றி சுரைஜ் அஹமது