காதல் கடிதங்கள்...
பலமுறை படித்திருந்தாலும் திரும்ப திரும்ப படிக்கத்தூண்டும் அக்க்ஷய புத்தகம்... காதல் கடிதங்கள்...
காதல் தோல்வி....
மழைக்கால மேகமாய் நீ குடை கொண்டு தருவாயா நீ ...
உன் மழைகாலம் பொய்யானால் என் இலைகள் தான் உதிர்ந்தோடுமே...
வானில் பறக்கும் கிளிகள் என் நெஞ்சில் உனது இதழ் ஈரத்துளிகள் ...
சுவாசிக்க மட்டும் தெரிந்த என்னை புகைக்க வைக்காதே...
உன் நினைவில் கொன்று இன்று என்னை புதைத்து விடாதே .....
காதல் தோல்வி....
தாய்...
பத்து மாதங்கள் வரை நீ தூங்கிவிட கூடாது என்று
விழித்துக்கொண்டே வயிற்றை தடவிக்கொண்டிருப்பவள்...
பத்து மாதங்களுக்குப்பின் நீ தூங்கவேண்டும் என்று
விழித்துக்கொண்டே உன்னை தடவிக்கொண்டிருப்பவள்....
நீ தடுக்கி விழுந்தாலும் தட்டி விட்டாலும்
உன்னை என்றுமே தடவி கொண்டிருப்பவள் .. தாய்...
Thursday, December 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//சுவாசிக்க மட்டும் தெரிந்த என்னை புகைக்க வைக்காதே..//
ன்னா அவசரப்பட்டுராதீங்கன்னா பேசி தீர்த்துக்கலாம்
ம்ம் விஷயங்கள் ஓகே அந்த என்ட்டர் கீயை சரியான இடத்தில் தட்டினால் சரி
நான் அவசரப்படமட்டேன் ... அப்படி பட்டிருந்தா இன்னைக்கு கவிதை எழுதி
அதற்கு உங்களோட கமெண்ட்ஸ் வாங்கிட்டு இருந்திருக்க மாட்டேன் :-) ...
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி
மிகவும் நன்றி...இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்..
Post a Comment