
என்னை நீங்கள் கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன் கவிழ்ந்து விடமாட்டேன்..
இந்த வசனத்தை கலைஞர் தொலைக்காட்சியில் நீங்கள் கேட்டிருக்ககூடும்...
இதே வசனத்தை சில நடிகர்களும், சில மக்களும் பேசியிருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் சிலவற்றை இங்கே படைத்துள்ளேன் சிரித்து மகிழவே ....
கூவம் பார்ட்டி:
அண்ணாத்தே ! அண்ணாத்தே ! ... இன்னா...... என்ன கடலாண்ட தூக்கினு போய் உள்ளர கவுத்துடலன்னு நேநிகிரியா அதுகெல்ல மெர்சலாக மாட்ட.... சும்மா சுறா கணக்கா கும்முனு மேதந்துகினு வருவா கவுந்துட மாட்ட...
சூப்பர் ஸ்டார் ரஜினி:
என்னை வாழவைத்தா தமிழ் மக்களே!

ஆஹா ஹா ஹா.... என்னை என்னை கடல்ல தூக்கி போடா இன்னொருத்தன் பொறந்துவரணும். அப்படியே போட்டாலும் சும்மா டைட்டானிக்கா மாதிரி தண்ணிய கிழிச்சுக்கிட்டுவருவேன். கண்ணா பன்னிங்க தான் கட்டு மரமா வரும்.சிங்கம் டைட்டானிக்கா வரும் .தெர்யுமில்ல நான் ஒரு தடவை கிழிச்சா நூறு தடவை கிழிச்சா மாதிரி.
கேப்டன் விஜயகாந்த்:

டேய்! காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் நான் பார்க்காத கடலாட நீங்க பார்த்துடீங்க. நான் கரண்ட் மாதிரிடா கண்ணுக்கு தெரியாம கடலுக்குள்ள இருந்து கூட வருவேண்ட.... இது இந்த பாகிஸ்தான் தீவிரவாதி மேல சத்தியண்டா ..
வடிவேல்:
அடேங்க நன்னாரி பயலே! கடல் தண்ணில என்னைய எவண்டா த

மேஜர் சுந்தராஜன்:

past 25 years அதாவது கடந்த 25 வருசமா.im a great champion in swimming.அதாவது நீச்சல் போட்டில நான் தான் சிறந்த வீரன். so nobody can drop me in sea .என்னை யாரும் கடலுக்குள போட முடியாது.... alright சரியா!!!
....
உங்கள் ஆதரவை பொறுத்து தொடரும்
2 comments:
alright சரியா!!!
சரி அண்ணாத்தே
:-))
முதல் முறை வந்ததற்கு நன்றி :-)
Post a Comment