
செந்தில் : அண்ணே என்ன பண்றீங்க....
கௌண்டமணி : Aeroplane ஓட்டிட்டு இருக்கேன் ... பார்த்த எப்படி தெரிது ஏன்டா சைக்கிள் கடைல என்னடா பண்ணுவாங்க பஞ்சர் தாண்ட ஓட்டிட்டு இருக்கேன் கோமுட்டி தலையா...
கஸ்டமர் : அண்ணே சைக்கிள் பஞ்சர் ஆய்டுச்சு பஞ்சர் ஓட்டனும்...
கௌண்டமணி : ஏன்டா சைக்கிளே பஞ்சர் ஆய்டுச்சா ... இல்ல சைக்கிள் டயர் பஞ்சர் ஆய்டுச்சா....
கஸ்டமர் : சைக்கிள் டயர்தானே பஞ்சர் ஆய்டுச்சு...
கௌண்டமணி : தெளிவா சொல்லுங்கடா.. எதோ நான் அறிவாளியா இருக்கிறதுனால எல்லாத்தையும் தெளிவா கேட்டு தெரிஞ்சுகிறேன்.இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜா இந்தியாவுல இருக்க வேண்டிய ஆளே இல்லடா அமெரிக்கவுள இருக்க வேண்டியவன் தப்பி தவறி இந்த வரப்பட்டிக்காட்டுல வந்து மாட்டிகிட்டேன் .சைக்கிள் விட்டுட்டு போபஞ்சர் போட்டு வெக்கிற ....
செந்தில் : ஏண்ணே அமெரிக்காவுல இருந்திருந்தா அங்கயும் சைக்கிள் கடைதான் வெச்சிருப்பீங்களனே ...
கௌண்டமணி : ஏன்டா கோமுட்டி தலைய உனக்கு நல்லதாவே தோனாதாடா .உன்னையெல்லாம் பக்கதுல அண்ட விட்டா அமெரிக்க இல்ல ஆண்டிபட்டி கூட போகமுடியதுடா இருந்தாலும் உன்னை என் நான் என்கூட சேர்த்துக்கிறேன் தெரியுமா எங்க வுட்டு நாய் செத்து போச்சு அன்னியில இருந்து பழையசோறு மிச்சமயிடுது அதை போடறதுக்காக உன்னை என்னோட சேர்த்துகிட்டு இருக்கேன் .. டேய் பனங்கொட்ட தலைய அந்த பம்பா எடுத்து சைக்கிளுக்கு காத்து அடிடா...
செந்தில் : சரினே ... அன்ன காத்து அடிச்சுட்டேனா ...
கௌண்டமணி : டேய் அரகொறைக்கு பொறந்தவனே .. tube செக் பண்ணுடா காத்து போகுதா இல்லையானு ....
செந்தில் : அண்ணே... காத்து போகலைனே .பஞ்சர் இல்லைன்னு நெனைகிறேன்..
கௌண்டமணி : என்னட இது டி காபி குடிக்க கூட காசு இல்ல
இப்ப என்ன பண்ணலாம்... சரி சும்மா ரெண்டு பஞ்சர்னு சொல்லி காசை கரந்துட வேண்டியது தான்..
செந்தில் : ஏண்ணே என்னணே இது நீங்களே 420 வேலை பண்ணலாமா...?
கௌண்டமணி : ஆமா நாங்க 420 இவரு 320.. போடா தீவிட்டி தலைய.. ஏன்டா 420 நா என்னனு தெரியுமா உனக்கு ...
செந்தில் :அண்ணே தெரியாதுனே...
கௌண்டமணி : அப்புறம் என்ன இதுக்குடா சொன்ன...
செந்தில் : இல்லைனே எல்லாரும் சொல்றாங்க அதனால நானும் சொன்னேன் ...
கௌண்டமணி : எல்லாரும் சொல்றாங்க எல்லாரும் சொல்றாங்காணு அது என்னனு தெரியாம நீயும் சொல்றா ஏண்டா இப்படி...... நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா. 420 நா என்னனு தெளிவா சொல்றேன் உன் காதை தொறந்து
நல்ல கேட்டுக்க .. 420 நா இந்தியன் பீனல் கோடு ல ஒரு section டா அது.
இந்தியன் பீனல் கோடுங்கிறது புத்தகம் மாதிரி அதுல எந்தெந்த குற்றத்துக்கு என்னென தண்டனைநூ விளக்கமா எழுதிருப்பாங்க...இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ் இந்த நாட்டுல எல்லாம் section 420இருக்குதூடா.. நல்லவன் மாதிரி நடிச்சு ஒருத்தனை ஏமாத்தி சொத்தை புடுங்கிறவன் , அடுத்தவன் சொத்தை அளிக்கிறவானோ அதை ஏமாத்தி விக்கிறவனோ இல்ல ஸீல் வெச்சா ஒரு சொத்தை ஏமாத்தி அதை நல்ல சொத்து மாதிரி கமிச்சு ஏமாத்தி விக்கிறவனோ எவனா இருந்தாலும் 420 section கீழ 7 வருசம் ஜெயில் களி திங்கணும், கம்பி எண்ணனும்டாஅதுமட்டும் இல்லாம ஃபைன் வேற போடுவாங்க...
இப்ப தெரியுதா 420 நா என்னனு இனிமேல் சம்மந்தமிலாமா 420ங்கிர வார்த்தைய சொன்ன மவனே உன்னை பொலி போட்ருவேன் . இனிமேல் இந்த ஊருக்குல எவனாவது காரணமிலா 420ங்கிர வார்த்தைய சொன்னீங்க என்ன நடக்கும்னு எண்னகே தெரியாது...
செந்தில்:அன்ன இதெலாம் எங்க இருந்து நே காத்துக்கிடீங்க...
கௌண்டமணி : டேய் வேண்டாம் எனக்கு தெரியும் நீ எதுக்காக இந்த கேள்விய கேட்குரேனு .நீ இப்படி கேட்டா நான் அதுக்கு "இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்" நு சொலவேன்னு நெனச்சுதானே இதை கேட்டா..
இப்போ சொலரேண்ட எனக்கு அரசியல் புடிக்காதுடா என்னை விடுங்கடா...