
உன் மொழி தன்னை என் இதயம் தொட கொண்டு செல்லும்
ஒலிப்பெரிக்கியாய் என் செவிகள்...
இவை இரண்டு மட்டும் செயல்பட ... என் இதயம்
மட்டும் இன்று இறந்து கிடக்கிறது....
உன் காதலைச்சொல்.. இதயம் உயிர்ப்பெறட்டும் ...
மாரடைப்பு...

காதல்(வாழ்கையில்) தோல்வியினால் இதயத்தில் ஏற்படும் பூகம்பம்...
மாரடைப்பு...
கொசுவத்தி

(சிறு)பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பாரகள்...
ஏனோ தெரியவில்லை பாம்பை போல என்னை படைத்திருந்தாலும்..
கொசுவை கொல்ல மட்டுமே என்னை கொளுத்துகிறார்கள்.. கொசுவத்தி...
அவள் ...

நெஞ்சு வலிக்கிறது சில நாட்களாக ஏனென்று தெரியும்..
தைலம் தடவச்சொன்னால் என் அம்மா வேண்டாம் என்றேன்...
என் இதயத்தில் இருப்பது அவள் என்று தெரியாமல்..
தடவினால் போகக்கூடிய வலியா... அவள்...
6 comments:
very nice good one
Thanks Angel...
அருமையான எண்ணங்கள்…பாராட்டுகள்..:)
நன்றி கொற்றவை..
சூப்பர்.. பாஸ்! நல்லா புரியும்படி எழுதியத்துக்கு..
நன்றி கலையரசன்..
Post a Comment