
எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவான உறுப்புகளின் நீரோடை இரத்தம்.இரத்தின் நிறங்கள் வேறுபட்டாலும் 99% அனைத்து உயிரிங்களுகும் இரத்த ஓட்டம் என்பது பொதுவான ஒன்றாகத்தான் இருக்கிறது.கரப்பான் பூச்சிகளுகுள்ளயே ஆணின் இரத்தம் நிறமற்றதாய், முதிர்ந்த பெண்ணின் இரத்தம் சிவப்பு கலந்த மஞ்சளாகவும் வேறுபட்டிருகிறது .
உயிரினத்திலேயே மேன்மையாக கருதப்படும் உயிரினம் மனித இனம் .அவர்களின் இரத்தம் மிகவும் விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது .இன்றைய உலகில் இரத்தம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகை தேவையாக இருக்கிறது.அறுவை சிகிச்சைக்காக இரத்தம், விபத்து சிகிச்சைக்காக இரத்தம் இப்படி மனிதர்களின் இரத்தம் பல வகையில் பயன்படுகிறது .உடல் நிலை சீராக இருக்க இரத்தம் என்பது அத்தியாவிசயமான ஒன்றே.உடலிலே பல கோளாறுகள் வர காரணம் இரதமின்மையே.
விலங்குகளின் ரத்தமும் பல வகையில் பயன்படுகிறது உணவிற்காக,மருத்துவத்திற்காக என்று பல வகைபடுத்தலாம்.

ஒரு மனிதனின் உடலில் எந்த வகையில் இரத்தபோக்கு ஏற்பட்டாலும், இழந்த ரத்தை முழுமையாக திரும்ப பெற 120 நாட்கள் ஆகின்றன.இது ஒரு சராசரி ஆரோக்கிய மனிதனின் உடலில் நடக்கும் வழக்கமான வேதியியல் நிகழ்வே. ஆரோக்கியமற்ற உடலிலோ இத்தகைய முறையான வேதியியல் நிகழ்வுகள் நடைபெறுவதில்லை என்பதே உண்மை.
எப்படி ஒரு உயிருக்கு இரத்தம் என்பது இன்றியமையாததோ அது போல தான் பூமிக்கும் தண்ணீர்.

பூமியில் இருக்கும் தண்ணீரின் பயன் ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரம் ஆயிரம். இரத்தம் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பொறுத்தே அது மறுபடியும் உருவாவது நிர்ணயிக்கபடுகிறது. மனிதனுக்கு விபத்தினால் ஏற்படும் ரத்தபோக்கை கட்டுபடுத்தாமல் விட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும்.ரத்ததானம் மூலம் வேல்யாகும் இரத்தம் உடலில் சிக்கிரமே திரும்ப ஊற்றெடுக்கும்.

மனிதனுக்கே இவ்வாறு என்றால் மனிதன் உருவாவதற்கு முன் உருவான பூமியின் நிலைப்பாடு எவ்வாறு என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள். தண்ணீரானது சரியான தேவைக்காக மட்டுமே பயன்படுத்தபட்டால் அது ஊட்றேடுக்கும் வாய்ப்புகள் உண்டு இல்லையேல் விபத்தில் ஏற்படும் மனிதனின் நிலைமை தான் பூமிக்கும்.
மனிதனின் ரத்தம் அசுத்தப்படுத்த படுகிறது சுற்றுப்புற மாசு அதற்கான இயற்க்கை காரணியாய் இருப்பினும். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவை செயற்கை காரணிகள். இரத்தம் அசுத்தப்படுமேயானால் மனிதன் வாழ்நாள் குறையும் வாய்ப்புகள் மிக அதிகம். தண்ணீருக்கும் இது பொருந்தும்.தண்ணீர் மாசிர்கான இரற்கை காரணிகள் எதுவுமில்லை.அனைத்தும் செயற்கை காரணிகளே. தொழிற்சாலை கழிவு, சாக்கடை கழிவு போன்றவை தன தண்ணிரை மாசு படுத்துகிறது. தண்ணீர் மாசுபட்டால் அதனால் பயன்படும் இயற்கைவளங்கள் அழியும். பூமியும் தன்மை மாறும். இதற்கான தீர்வு நம்மிடம் தான் உள்ளது .அதனால் தண்ணீரை சேமியுங்கள், தண்ணிரை மாசை தடுங்கள் இந்த பூமியை காப்பற்றுங்கள்.
மனிதன்... இரத்தம்.... பூமி... தண்ணீர்....
4 comments:
சமூக அக்கறை கொண்ட பதிவு.. வாழ்த்துக்கள்..
நன்றி அண்ணாமலையான்...
மனமார்ந்த பாராட்டுக்கள்..... தொடர்ந்து இது மாதிரியான சமூக அக்கறை உள்ள பதிவுகள் எழுத வேண்டும் . நானும் எழுத முயற்சிக்கிறேன் .
நன்றி
நன்றி Rajesh Subramanian
Post a Comment