Tuesday, January 5, 2010

தூங்குவதை போல் நடிக்கிறார்கள்











ஆற்காட்டார் : தலைவரே வணக்கம்...

தலைவர்: வாங்க ஆற்காட்டார் தம்பி. எப்படி இருக்கீங்க..

ஆற்காட்டார் : நான் நல்லா இருக்கேன் நீங்க சௌக்கியமா இருக்கீங்களா.
தளபதி எப்படி இருக்கார்....

தலைவர்: அனைவரும் நலம்.... அப்புறம் தொகுதி நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு.எப்படியும் அடுத்த தடவையும் நாம வந்துருவோம்னு நெனக்கிறேன்.

ஆற்காட்டார்: கண்டிப்பா தலைவரே அதிலென்ன சந்தேகம்..நீங்க அந்த காப்பீட்டு திட்டம் இந்த காப்பீட்டு திட்டம்னு போட்டு டெரர் அ இருக்கீங்க மக்கள் மத்தியில ... அப்படி இருக்கிறப்போ நம்மளை எவனும் இம்ம்ம் அசைச்சிக்க முடியாது...

தலைவர்: ஹ்ம்... சரியாய் சொன்னீங்க தம்பி. எப்படியோ புலிகளோட தலைவனை கொன்னுடதால அந்த பிரச்சனையை மக்கள் மறந்துட்டாங்க.ஆயிரம் பிரச்சனை எனக்கிருக்க இலங்கை தமிழர் பிரச்சனை எல்லாம் எனக்கேதுக்கு சொல்லுங்க ... எப்படியாவது தளபதியை அடுத்து
முதல்வர்ராக்கிடனும் .. அப்புறம் பேரபுள்ளைங்க எல்லாம் சினிமாள கூத்து காட்ட கிளம்பிட்டாங்க .. அதனால தான இப்பெல்லாம் சினிமாகாரங்களுக்கு நெறைய சலுகைகள் பண்றேன் ... அடுத்தது செம்மொழி வாங்கித்தரேன்னு சொல்லிருக்கோம் இல்ல அதை கொஞ்ச நாள் வெச்சு காலம் ஓட்டலாம் ...

ஆனா இலங்கை தமிழர் பிரெச்சனை இருக்கே ஐயோ சாமி.உண்ணவிரதம் அப்படி இப்படி னு செய்யங்காட்டி தான் இப்போ கொஞ்சம் ஓய்வா இருக்க முடியுது .. நாம என்னைக்கும் தூங்க போறதில்ல தூங்கிர மாதிரி நடிக்கணும்.... அப்பா தான் பொழப்பை ஓட்ட முடியும் தம்பி.... அப்புறம் வேற என்ன விஷயம்... சூரிய ஒளி ல மின்சாரம் வீட்டில உபயோகபடுத்தனும்னு சொன்னது எந்த அளவுக்கு மக்கள் கிட்ட போயிருக்கு ....

ஆற்காட்டார்: ஹ்ம் ஏதோ செய்திகள்ல வரணும்னு நாம சொல்ல வேண்டியிருக்கே.... எப்படியும் நம்ம வீட்டில இதெல்லாம் செய்ய போறதில்ல.. ஏதோ மக்கள் நாம சொல்றதை கேட்டு செஞ்சாங்கனா .. கரண்ட் அடிக்கடிஆஃப் பண்ணினாலும் எவனும் கம்ப்ளைன்ட் பண்ண போறதில்ல .நமக்கு தேவைனா எங்க இருந்து வேணும்னாலும் கரண்ட் எடுத்துக்கலாம் எவன் எப்படி போன நமக்கு என்ன...நம்ம காட்சி கூட்டம் மாநாடு எல்லாத்துக்கும் திருட்டு கரண்ட் எடுத்து யூஸ் பண்ணிக்கிறோம் ... எவனுக்கு தெரிய போகுது இதெல்லாம்... Government ரூல்ஸ் இருக்கு ஜெநரேடார் தான் யூஸ் பண்ணனும்னு ...எவனுக்கும் அந்த அளவுக்கு விஷயம் ம் தெரியாது அதனால நம்ம ராஜ்ஜியம் தான் தலைவரே...

தலைவர்: ஆமாம்ந்த்ம்பி... சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் இருந்து எப்படியோ அம்மா கிட்ட இருந்து தனி தெலுங்கான வாங்குறதுக்கு முயற்சி பண்ணிருக்கார் ... நாமளும் இந்த மாதிரி தொடர் உண்ண விரதம் இருந்திருன்தொம்ன்ன கண்டிப்பா இலங்கை தமிழர் பிரச்சனை தீர்றதுகான வாய்ப்பு கண்டிப்பா இருந்திருக்கும்... பொட்டி ராமுழு ஒரு ஆள் இதே போல தனி அந்தர மாநிலம் வேணும்னு 1958 ல 58 நாள் உண்ணாவிரதம் இருந்து மண்டயப்போட்டுட்டார் அப்போ ராஜாஜி, நேரு எல்லாம் வேணும்னே கண்டுக்காம விட்டுடாங்க ... அது மாதிரி நம்மளையும் விட்டுடாங்கன்னா என்ன பண்றது இப்போ.... அதனால தான் சொல்றேன் தூங்குற மாதிரி நடிக்கணும் ஆனா தூங்கக்கூடாது...சரி தம்பி நான் தூங்க போறேன் நீங்க கெளம்புங்க காத்து வரட்டும்...

ஆற்காட்டார்: சரிங்க தலைவரே வணக்கம் கிளம்புறேன் ....

5 comments:

angel said...

very nice though seems to be as a comedy // ஏதோ செய்திகள்ல வரணும்னு நாம சொல்ல வேண்டியிருக்கே.... எப்படியும் நம்ம வீட்டில இதெல்லாம் செய்ய போறதில்ல்ளா.. ஏதோ மக்கள் நாம சொல்றதை கேட்டு செஞ்சாங்கனா .. கரண்ட் அடிக்கடிஆஃப் பண்ணினாலும் எவனும் கம்ப்ளைன்ட் பண்ண போறதில்ல .நமக்கு தேவைனா எங்க இருந்து வேணும்னாலும் கிரேன்ட் எடுத்துகலம் எவன் எப்படி போன நமக்கு என்ன...நம்ம காட்சி கூட்டம் மாநாடு எல்லாத்துக்கும் திருட்டு கரண்ட் எடுத்து யூஸ் பண்ணிக்கிறோம் ... எவனுக்கு தெரிய போகுது இதெல்லாம்... Government ரூல்ஸ் இருக்கு ஜெநரேடர் தான் யூஸ் பண்ணனும்னு ...எவனுக்கும் அந்த அளவுக்கு விசயம் தெரியாது அதனால நம்ம ராஜியம் தான் தலைவரே...//

its the truth

rajeshkannan said...

நன்றி angel

Anonymous said...

கலைஞர் தமிழ் நாட்டுக்குத்தான் முதல்வர், எல்லா புறம் போக்குகளுக்கும் இல்லே .

rajeshkannan said...

Thanks raki

Anonymous said...

கலைஞர் தமிழ் நாட்டுக்குத்தான் முதல்வர், எல்லா புறம் போக்குகளுக்கும் இல்லே .

THEN WHY HE CALLED HIMSELF AS 'THAMILINA THALLAIVAR' - IPPADIKU ONE OF THE PURAMPOOKU