Tuesday, November 10, 2009

மண் சட்டி ......


குருராஜா ஒரு அரசாங்க அலுவலகத்திலே சிறப்பான சம்பளத்துடன் வேலை செய்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவி ஷீலா மற்றும்
9 வயதான மகன் சித்தார்த் . ஒரு சிறப்பான குடும்ப தலைவனாய் இருந்தானே தவிர ஒரு நல்ல தனயனாய் அவனது பெற்றோருக்கு அவன் இருக்க வில்லை. குருராஜவிர்க்கு 9 அண்ணன்கள் , 3 அக்காக்கள் அவனுடைய தந்தைக்கு இவர்களை கரை எற்றுவதற்குள்ளகாவே 60 வயதை கடந்து விட்டார்.

தனது மனைவியையும் ஒரு ஆண்டுக்கும் முன் இழந்து விட்டார். குருராஜா கடைசி பிள்ளை என்பதால் அவனுக்கு எல்லா சலுகைகளையும் வழங்கினார்.
அவனும் பெற்றோர்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவனாய் இருந்தான்.எல்லா பிள்ளைகளும் தன் தாய் தந்தையை உதறினாலும் அவர்களை நான் காப்பாற்றுவேன் என்று அவர்களை தன்னுடனே வைத்துகொண்டான்.
திருமணமான 3 ஆண்டுகளிலேயே தான் தாய் தந்தையரை பாரமாய்நினைக்க துவங்கினான். அவர்களுக்கான பணிவிடைகளை செய்ய மறந்தான். அதனலயே அவனது தாய் நோய்வாய்பட்டு ஒரு ஆண்டுக்குமுன் இறந்து போனார்.

இன்று இவன் தந்தைக்கோ 70 வயது, நடக்க முடியாமல் கிடையாய் படுத்திருந்தார். அவருக்கென தனியாக வீட்டருகே ஒரு ஓலை குடிசையை உருவாக்கி அங்கே ஒரு கயிற்று கட்டிலிலே கிடத்தினான் பெரியவரை குருராஜா.
அங்கே அவருகென ஒரு மண் சட்டியிலே சாப்பாடு போடுவது வழக்கம். அதுவும் தான் வீட்டு வேலைக்காரியிடம் கொடுத்து தான் போடா சொல்வான். இதை அவனது மகன் சித்தார்த் தினமும் பார்த்துக்கொண்டிருபான். அவனோ அவனது மனைவியோ இந்த பெரியவர் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பி பார்க்கமாட்டார்கள். சித்தர்த்தையும் போக விட மாட்டார்கள் இருப்பினும்,
சித்தார்த் யாருக்கும் தெரியாமல் அவனது தாத்தாவை பார்க்க போவதுண்டு அப்போதெல்லாம் அவனுக்கு ஒரு கதை சொல்வார் அந்த பெரியவர்.

நாற்றமும் அசிங்கமுமாய் இருந்தாலும் அவனுடைய தாத்தாவின்
மேல் அவனுக்கு கொள்ளை ப்ரியம்.

ஒரு நாள் அவர் இறந்துபோகவே சித்தார்த் துடி துடித்துப்போனான். குருராஜா இறுதி சடங்குகளை முடித்து விட்டு வீடு திரும்பினான்.வந்தவுடன் குடிசைக்குள் நுழைந்தான் அங்கே இருந்த மண் சட்டியை வெளியில் எடுத்து கொண்டு வந்தான்.அதை பார்த்த சிட்தார்த் "அப்பா என்ன பண்றீங்க" அதற்க்கு குருராஜா "இந்த சட்டிய கொண்டு போய் வெளியிலே தூக்கி போட போறேன்டா " என்றான். அதை கேட்ட சித்தார்த் "அப்பா வேண்டாம் பா அதை தூக்கி போடாதீங்க, அது இங்காயே இருக்கட்டும் நாளைக்கு நீங்க வயசானதுக்கபுரம் உங்களுக்கு சாப்பாடு போட அது பயன்படும் " என்று சொன்னதை கேட்ட குருராஜவிற்கு நெஞ்சிலே சூடு வைத்தது போல் ஆனது.

சட்டியை கீழே தவற விட்டான் உடைந்தது மண் சட்டி, உடைந்தது மண் சட்டி மட்டும் அல்ல அவனது மனசும் தான்.


பின் குறிப்பு: எங்கோ.... எதிலோ படித்தது....

1 comment:

பாலாஜி சங்கர் said...

நீங்கள் கதை எழுதும்போது ஒரு மனைவி என்று எழுத வேண்டிய அவசியமில்லை
மனைவி மற்றும் மகன் மகள் என்று சொன்னலே போதும்
மற்றபடி நன்றாக இருந்தது உங்கள் பதிவு